Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 19 February 2014

தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்ணை ஒளிவு மறைவின்றி வெளியிட திட்டம்

தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண் விவரத்தை ஒளிவு மறைவின்றி இணையதளத்தில் வெளியிட தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது.
டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம்
சென்னை பிராட்வே பஸ்நிலையம் அருகே தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகம் உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அவ்வப்போது தேர்வுகளை நடத்தி ஆட்களை தேர்வு செய்து வருகிறது. துணை கலெக்டர்கள், போலீஸ் துணை சூப்பிரண்டு, வர்த்தக வரித்துறை உதவி ஆணையர், உதவி பொறியாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பல்வேறு பணிகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்தி வருகிறது.
முடிவு வெளியிடப்படவில்லை
தற்போது குரூப்–1 தேர்வு, குரூப்–2 தேர்வு, குரூப்–4 தேர்வு ஆகிய தேர்வுகளின் முடிவு வெளியிடப்படாமல் உள்ளது. அவற்றை வெளியிடும் பணியில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் மும்முரமாக உள்ளனர்.
மதிப்பெண் விவரம்
இந்த நிலையில் சில தேர்வுகளில், தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் தெரியவில்லை என்றும், வெளிப்படையான முறை தேவை என்றும் பலர் தேர்வாணையத்தை வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எந்த ஒரு தேர்விலும் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் விவரம், அவர்கள் எந்த இட ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படுகிறார்கள். எதனால் தேர்வு செய்யப்படவில்லை என்ற அனைத்து விவரங்களையும் ஒளிவு மறைவின்றி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்திலும், ஆணைய அலுவலகத்தின் தகவல் பலகையிலும் வெளியிட திட்டமிட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment