Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 22 February 2014

தேசிய திறனாய்வு தேர்வு: கேள்வித்தாள் இல்லாததால் தேர்வு நேரம் மாற்றியமைப்பு


 பல மாவட்டங்களில், கேள்வித்தாள் கட்டுகளை ஏற்றிய வாகனங்கள், குறிப்பிட்ட மையத்திற்கு செல்லாததால், பள்ளி மாணவர்களுக்கு, இன்று காலை, நடக்க இருந்த தேசிய திறனாய்வு தேர்வு, பிற்பகல், 2:00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர், மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெறுவதற்காக, இன்று காலை, 10:00 மணிக்கு, தேசிய திறனாய்வு தேர்வை நடத்த, தேர்வுத் துறை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த தேர்வை, 1.6 லட்சம் பேர் எழுத இருந்தனர். கடைசி நேரத்தில், கேள்வித்தாள் அச்சிடப்பட்டதால், அவை, நேற்றிரவு வரை, தேர்வு மையங்களுக்கு சென்று சேரவில்லை. இதனால், இன்று காலை, 10:00 மணிக்கு நடக்க இருந்த தேர்வை, பிற்பகல், 2:00 மணிக்கு தள்ளிவைத்து, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இந்த விவரம், முதன்மை கல்வி அலுவலர்கள் மூலமாக, இன்று காலை, மாணவர்களுக்கு அறிவிக்கப்படும். 

No comments:

Post a Comment