Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 16 February 2014

இடைநிலை ஆசிரியர் சம்பள முரண்பாட்டினை நீக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டு வாரத்தில் பதில் அளிக்க அரசுக்கு வாய்ப்பு !!!

SSTA சார்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சென்ற ஆண்டே தொடுக்கப்பட்ட வழக்கினை யாவரும் அறிவீர்கள்.அந்த வழக்கினை விசாரணைக்கு மீண்டும் கொண்டு வருவதில் சரியான நீதிமன்ற நடைமுறைப்படி முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்திலும் தன் கணக்கினை கனகச்சிதமாக, உண்மையை மூலதனமாக, மேலும் உச்சநீதிமன்ற அனுபவத்தை கொண்டு

வெள்ளிக்கிழமை கோர்ட் எண்:11இல் வரிசை எண்: 80 ஆக நீதியரசர்.திரு. சுப்பையா அவர்களிடம் விசாரணைக்கு வந்தது. மரியாதைக்குரிய அரசு வழக்கறிஞர் திரு.விஜயகுமார் அவர்கள் ஆஜரானார்கள். நம்முடைய சார்பில் மூத்த மற்றும் பல கல்வித்துறை சமந்தமான வழக்குகளில் சாதகமான தீர்ப்பினை மனுதாரருக்கு பெற்றுத்தந்த வழக்கறிஞர் திரு.செல்வராஜ் அவர்கள் ஆஜராகி வாதாடினார். நீதியரசர் அரசின் நிலைப்பாடு என்ன? எனக் கேட்டபோது, இன்னும் இரண்டு வாரத்தில் அரசினை கலந்து பதில் மனு தாக்கல் செய்கிறோம் என சொல்லியதை ஏற்றுக்கொண்ட நீதியரசர் அவர்கள் , இரண்டு வாரம் வழக்கினை ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment