Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 12 February 2014

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்தவும், குற்ற சம்பவங்களின் தன்மைக்கேற்ப, தண்டனைகளை கடுமையாக்கவும், "போப்சோ" சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்தவும், குற்ற சம்பவங்களின் தன்மைக்கேற்ப, தண்டனைகளை கடுமையாக்கவும், "போப்சோ" சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய தண்டனை சட்டத்தில் விடுபட்ட குற்றங்களுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. குழந்தைகள் பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் வரை, பல்வேறு தளங்களில், பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில்,42 சதவீதம் பேர் குழந்தைகள் என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதில் 20 சதவீதம் குழந்தைகள், உடலளவில் வளர்ச்சியடைவதற்கு முன்பே, பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதை கட்டுப்படுத்தவும், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கு, தண்டனைகளை கடுமையாக்கவும், 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான "போப்சோ" சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, காவல்துறை, சிறப்பு சிறார் காவல் அலகு, பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அதிகாரி, குழந்தைகள் நலக்குழு, கிராம குழந்தைகள் பாதுகாப்பு குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு போன்ற இடங்களில், குழந்தைகளுக்கு எதிராக நடந்த பாலியல் குற்றங்களுக்கு புகார் அளிக்கும் போது, சம்பவத்தின் தன்மைக்கேற்ப, சட்டவிதிகளின் அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், போப்சோ சட்டத்தில், புகார்களை பதிவு செய்யும் போது, ஏற்கனவே குற்றம் செய்தவருக்கு கடுமையான கடுங்காவல் தண்டனை வழங்கப்படுகிறது. குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும், தண்டனை வழங்க, சட்டவிதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டத்தில் விடுபட்ட பாலியல் குற்றங்களை, போப்போ சட்டத்தில் சேர்த்து, தண்டனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவையில் 2012ம் ஆண்டு 15 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகளின் பங்களிப்பு சார்ந்த நிறுவனங்களுக்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு நல மையத்தின் சார்பில், போப்சோ விதியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. இதனால், பாலியல் குற்ற செயல்கள் கணிசமாக குறையும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு நல மைய அதிகாரிகள் கூறுகையில், &'&'குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் சிறு குற்றங்கள் முதல், பெரிய அளவிலான பாலியல் தொந்தரவுகள் வரை தனித்தனியாக பிரித்து, தண்டனைகள் வழங்க போப்சோ சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளை போல, ஆண் குழந்தைகளுக்கான பிரச்னைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என, பல்வேறு தரப்பினருக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்த பணிகள் நடக்கின்றன. தொடர் விழிப்புணர்வால் பாலியல் குற்றங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியும்" என்றார்.

No comments:

Post a Comment