Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 22 February 2014

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெற புது விண்ணப்பம்


ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, "பென்ஷன்' மற்றும் இதர பணபலன்களை வழங்கும் நடைமுறையை எளிதாக்குவதற்காக, புது விண்ணப்பத்தை, அரசு அறிமுகப்படுத்த உள்ளது. 
இதற்காக, "படிவம் 5' என்ற புதிய விண்ணப்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில், அனைத்து விதமான தகவல்களையும், சம்பந்தப்பட்ட ஊழியரே, சுயமாக சான்றொப்பம் அளிக்க வேண்டும். இதில், அந்த ஊழியர், பெயர், முகவரி, வங்கி கணக்கு விபரம் அளிக்க வேண்டும். மேலும், மொபைல் போன் நம்பர், இ மெயில் முகவரி, ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும்.இதன் மூலம் தனிப்பட்ட ஊழியருக்கு ஏற்படும் சிரமங்களை சரி செய்வதோடு, அனைத்து நடவடிக்கைகளும், வெளிப்படையாக இருக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment