Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 22 February 2014

தேர்வு காலத்தில் குழுவாக படிக்கும் மாணவர்கள்!

தேர்வில் உங்களின் மிகச்சிறந்த ஆற்றல் வெளிப்பட, உங்கள் மூளையை சிறந்த செயல்பாட்டில் வைத்திருக்க உதவும் சில உணவுகளை பற்றி ஏற்கனவே பார்த்தோம். ஆனால் மூளை என்பது நாணயத்தின் ஒரு பக்கம் என்றால் அடுத்த பக்கம் மனம்.
கம்ப்யூட்டர் என்பது ஹார்ட்வேர் என்றால் அதனை இயக்குவது சாப்ட்வேர் தானே? அதேபோல மூளை ஹார்ட்வேர் என்றால் அதனை இயக்கும் சாப்ட்வேர் தான் உங்கள் மனது. சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர் என்றாலும் சாப்ட்வேரில் வைரஸ் பிடித்து இருந்தால் ஒன்றுமே பிரயோஜனம் இல்லைதானே ? அதேபோல தேர்வு காலத்தில் உங்கள் மனதில் எந்தவிதமான வைரஸும் தாக்கி உங்களை பழுதடைய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு! அப்படி உங்களை தாக்கி உங்களை செயலிழக்க வைக்கும் சில வைரஸ்களை இங்கே பார்ப்போம்.
ஒப்புமை / comparison
நீங்கள் எல்லோரும் சேர்ந்து படித்துக் கொண்டு இருக்கும்போது உங்களை விட வேகமாக இன்னொருவன் பதில் சொல்லும்போது அல்லது உங்களுக்கு சுத்தமாக நினைவில் இல்லாத ஒரு வரி விடைகளை உங்கள் தோழி சரளமாக கேட்கும்போது அல்லது "நான் கண்டிப்பாக Maths -ல் 100 மதிப்பெண் வாங்கிவிடுவேன் பார்" என்று யாரோ ஒரு படிப்ஸ் பேசும்போது, உங்கள் மனதை பிடித்து ஆட்டுமே ஒரு கிலி, அடி வயிறு கபகப என்று பற்றிக் கொண்டு வரும்.
உங்கள் மீதே உங்களுக்கு பல சந்தேகங்கள் வந்துவிடும். உங்கள் அறிவையோ, உழைப்பையோ அடுத்தவருடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ள இது நேரம் அல்ல. இந்த ஒப்புமை வைரஸ் உங்களுக்குள் நுழைந்துவிட்டால் அது உங்கள் புத்தியை மழுங்க செய்துவிடும். அவர்கள் கடந்து வந்து இருக்கும் பாதை, இனி கடக்க போகும் பாதை அவர்களுடையது. உங்களுடைய பாதையை மட்டும் தான் நீங்கள் பார்க்க வேண்டும். ஆகவே இந்த வேலைக்காகாத எண்ணங்களை விட்டுவிட்டு, ஆக வேண்டிய காரியத்தில் இறங்குங்கள். நன்றாக திட்டமிட்டு முடிக்க வேண்டிய சிலபசை(syllabus) முடித்து ரிவிஷன் செய்ய ஆரம்பியுங்கள்.
மாணவர்களில் இரண்டு ரகம் இருப்பார்கள். முதலாவது ரகம் நிஜமாகவே உங்கள் முன்னேற்றத்தில் கவனம் வைத்து "இதை படித்து விட்டாயா? அதை படித்து விட்டாயா?" என்று உங்களுக்கு ஊக்கமளிப்பார்கள். உங்களிடம் ஒரு ஆரோக்கியமான போட்டியை வைத்து உங்களுடன் வெளிப்படையாக பழகுபவர்கள். இன்னொரு ரகமோ ஆரோக்கியமான போட்டியை வளர்த்துக் கொண்டு, நீங்கள் படிக்கும் நேரத்தில் நீண்ட நேரம் உங்களிடம் பேசி, கவனத்தை குழைத்து, நீங்கள் எதையோ படித்துவிட்டால் "ஐயோ, நீ அதைப் படித்து விட்டாயா? நான் படிக்கவே இல்லை, உனக்கென்னப்பா நீ புத்திசாலி" என்று ஓவர் பில்ட் அப் கொடுக்கும் நண்பர்கள். இந்த இரண்டாவது ரகத்தினரிடம் இருந்து, இந்த கடைசி நாட்களில் நீங்கள் கொஞ்சம் தள்ளியே இருப்பது நல்லது.
அவர்களின் தொலைபேசி அழைப்பினை தவிர்த்து விடுங்கள். அவர்களுடைய உணர்ச்சிகள் உங்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். முதல் ரகத்தினரிடம் தினமும் ஐந்து நிமிடங்கள் பேசுங்கள். அவர்கள் உங்களை ஊக்கப் பாதையில் நடக்க உதவுவார்கள். எந்த ஒரு சாதனைக்கும் சரியான சேர்க்கை அவசியம். இது "நண்பன்டா" என்று வசனம் பேசும் நேரமல்ல. இந்த நாட்கள் உங்கள் வாழ்க்கைக்கான அஸ்திவாரத்தை பலமாக போட்டாக வேண்டிய நாட்கள். இந்த ஒரு மாதகாலம் தொலைபேசியில் உங்கள் நண்பர்களிடம் இருந்து பிரிந்து இருப்பதால் ஒன்றும் குறைந்துவிட மாட்டீர்கள்.
நீங்கள் எந்த ரகம் என்பது உங்கள் நண்பர்கள் உங்களை தொடர்பு கொள்கிறார்களா, இல்லையா? என்பதிலேயே தெரிந்து விடும்! நாம் இரண்டாவது ரகமாக இதுவரை இருந்து இருந்தாலும் மாறுவது கடினமில்லையே! இன்று முதல் அடுத்தவருக்கும் நமக்கும் பயனுள்ளவர்களாக இருப்போமே.
தேவையற்ற ஒப்புமைகளில் இருந்து விடுபட்டு, மனதை ஆரோக்கியமாக்க, சில சக்திவாய்ந்த NLP (Neuro Linguistic Programming - மூளையை நாம் விரும்பும் மாதிரி செயல்படுத்தும் முறைகள்) வழிமுறைகள் இருக்கின்றன. கல்லூரியில் சேர்வதற்கு முன்னர் அவற்றை கற்றுக் கொண்டு விடுங்கள். அது கல்லூரி படிப்பில் வெற்றிபெற உதவும். இப்போதைக்கு இந்த வைரஸில் இருந்து விடுபட சிறந்த வழி - ஒப்புமை ஏற்படுத்தக்கூடிய காரணங்களை தவிர்த்து விடுவதுதான்.
குழுவாக படிக்கும் மாணவர்கள்
தேர்வு காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான வழியில் படிப்பது அவர்கள் இயல்புக்கு தகுந்தாற்போல் இருக்கும். சிலருக்கு சேர்ந்து படிப்பது நிறைய படிக்க வைக்கும். ஆனால் சிலருக்கோ, தனியாக படித்தால்தான் ஒத்துவரும். உங்கள்ளுக்கு எவ்வழி சிறந்ததோ அதை தேர்ந்து எடுங்கள். குருட்டாம் போக்கில் உங்கள் நண்பர்கள் அப்படி செய்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக அவர்கள் வழியில் நீங்களும் செல்லாதீர்கள்.
உங்கள் வழியை நீங்கள் வகுத்துக் கொள்ளுங்கள். நிறைய காலத்தை வீணடித்து விட்டு இப்போது படபடக்கும் மாணவர்களா நீங்கள்? அப்படியெனில், இப்போது நிறைய கிடைக்கும் ப்ளூ ப்ரிண்ட்டினை வாங்கி பாருங்கள். அதில் குறிப்பிட்டுள்ள பாடங்களுக்கு அதிக கவனம் கொடுத்து மனதில் ஏற்றிக்கொண்டு ரிவைசும்(revise) செய்யுங்கள்.
சீராக திட்டமிட்டு கடைசி பரீட்சைகளை விடுமுறை நாட்களில் முதலில் ரிவைஸ் செய்துவிட்டு, பின்பு முதல் பரீட்சைக்கு படிக்க ஆரம்பியுங்கள். அதிலும் சிறந்தது ஒவ்வொரு பாடத்திற்குமான நேரத்தை குறித்து தினமும் அந்த அட்டவணைப்படி படிப்பது. எது எப்படி இருந்தாலும் அடுத்தவர்களுடன் ஆரோக்கியமற்ற ஒப்புமை மட்டும் வேண்டாம்.
அடுத்த வைரஸான "சுய பச்சாதாபம் மற்றும் தாழ்வு மனப்பான்மை" நம்மை எப்படி செயலிழக்க வைக்கிறன்றது என்பதை பின்னர் பார்ப்போம்.
                                                         -கீர்த்தன்யா, மைன்ட்பிரஷ்

No comments:

Post a Comment