Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 5 February 2014

ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பணி பதிவேடு: இ.சர்வீஸ் ரிஜிஸ்டர் பதிவுகளை தலைமை ஆசிரியர்களே பதியச்சொல்லி கட்டயப்படுத்துவதை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது.


ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பணி பதிவேடு:

இ-சர்வீஸ் ரெஜிஸ்டர் தொடங்க திட்டம் 
ஆசிரியர்களின் ஜாதகமாக விளங்குவது அவர்களின் பணி பதிவேடு ஆசிரியர்களின் விவரங்கள் பொதுவானவையா? ஆசிரியர்கள் பிரவுசிங் செண்டர்களில் கொடுத்து இதை செய்யலாமா? தொடக்க நடுனிலைப் பள்ளி ஆசிரியர்களின் விவரங்கள் இ -ரிஜிஸ்டர் பதிவு அதிகாரிகள் குழு அமைத்து அந்தந்த ஒன்றியங்களில் செய்ய தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோருகிறது.

மேலும் அந்தந்தபள்ளி தலைமை ஆசிரியர்களே பிரவுசிங் செண்டரில் சென்று அவர்கள் பள்ளி ஆசிரியர்களின் இ.சர்வீஸ் ரிஜிஸ்டர் பதிவுகளை பதியச்சொல்லி உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் கட்டயப்படுத்துவதை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது.
இது ரகசியக் பாதுகாக்கப்படுவது மறுக்கப்படுவதுடன்,தேவையற்ற மன உளைச்சளையும்,பொருட்செலவையும் ஆசிரியர்பால் நிர்வாகம் திணிக்க வழிவகுப்பதாக அமையும்.இதனால் கற்பித்தல் பணியும் வெகுவாக பாதிக்கும்.
எனவே இதன் மீது முக்கிய முடிவாற்ற இயக்குனர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறது.

No comments:

Post a Comment