Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 5 February 2014

இரட்டைப்பட்டம் வழக்கு தள்ளுபடி. உச்ச நீதி மன்றம் செல்ல முடிவு.

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதியரசர் திரு.ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் திரு.சத்தியநாரயணா அடங்கிய முதல் அமர்வில் முதல் வழக்காக வந்த இரட்டைப்பட்டம் வழக்கு நீதியரசர்களின் தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. இந்த வழக்கின் ரிட் அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற நீதியரசர்களின் முடிவால் சற்று அதிர்ச்சியடைந்த ஒருங்கிணைப்பாளர்கள் அரசின் எதிர் மனுவால் இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என சமாதனம் அடைந்தனர். இருந்தாலும் வழக்கில் வெற்றியடைவதே நோக்கம் என்ற குறிக்கோளுடன் உடனடியாக புது தில்லி உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். இரட்டைப்பட்டத்தின் அடுத்த எபிசோட் தொடரும்...........

No comments:

Post a Comment