Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 21 February 2014

டிட்டோஜாக் - பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை முடிவு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த நிலைபாடு விரைவில் அறிவிப்பு

டிட்டோஜாக் தலைவர்கள் இன்று காலை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. அனைத்து கோரிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு கோரிக்கைக்கும் தனித்தனியாக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. ஆயினும் நிதிச் சார்ந்த கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க முடியாது எனவும் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 
பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பிரச்சனைகள் எனில் உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதாகவும், நிதிச்சார்ந்த தீர்வுகள் உடனடியாக தீர்க்க இயலாது எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே இதையடுத்து டிட்டோஜாக் தலைவர்கள் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைமையகத்தில் கூடி விவாதிக்கின்றனர். அடுத்தக்கட்ட முடிவு குறித்து விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. செ. முத்துசாமி தெரிவித்தார். பள்ளிக்கல்விச் செயலாளருடனான சந்திப்பின் போது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர்களும் உடன் இருந்தனர். மூன்று நபர்க் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட டிட்டோஜாக் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை நிதித்துறை செயலாளருடன் பேசி வெளியிட ஆவணச் செய்வதாக பள்ளிக்கல்விச் செயலர் தெரிவித்தாக தெரிவித்தார்

No comments:

Post a Comment