மக்களவை தேர்தலை முன்னிட்டு, தேசிய திறந்தநிலைப் பள்ளி 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை இந்த முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 24-ம் தேதி தொடங்குகின்றன. தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், தேசிய திறந்தநிலை பள்ளி இணையதளத்திலும் (www.nios.ac.in) ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதை இணைதளத்தில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேசிய திறந்தநிலைப் பள்ளி சென்னை மண்டல இயக்குநர் பி.ரவி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment