Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 14 May 2014

வேதாரண்யம் தாலுகாவில் ஆசிரியர்கள் இல்லாத பள்ளி 100% தேர்ச்சி

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 21 மாணவிகள், 16 மாணவர்கள் உட்பட 37 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதி இருந்தனர். இதில் 100% தேர்ச்சி பெற்றனர்.2009ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளியில் பிளஸ் 2வில் இயற்பியல், ஆங்கிலம், தமிழ் ஆகிய 3 பாட பிரிவுகளுக்கு மட்டுமே முதுகலை ஆசிரியர்கள் பணியில் இருந்தனர். மற்ற பாடங்களுக்கு 10ம் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் வெளியில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து பாடம் நடத்தினர். 3 பாட பிரிவுகளுக்கு ஆசிரியர் இல்லாத நிலையிலும், மாணவ, மாணவிகள் தாங்களே முயற்சி செய்து படித்து 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment