பிளஸ்2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் உடனடித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வசதியாக ஒரு மாதம் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் மார்ச் மாதம் நடந்த பிளஸ்2 பொதுத் தேர்வை 8.21 லட்சம் பேர் எழுதினர். முடிவுகள் 9ம் தேதி வெளியானது. 76 ஆயிரத்து 973 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அதாவது 7.44 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாதவர்களில் பலர் மறுகூட்டலுக்கும், விடைத்தாள் நகல் பெறவும் விண்ணப்பித்து வருகின்றனர். மேலும், பலர் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு நடைபெற உள்ள உடனடி சிறப்பு தேர்வை எழுத தயாராகி வருகின்றனர்.
இந்த உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்றால், நடப்பு கல்வி ஆண்டிலேயே தொடர்ந்து இடைவெளியின்றி உயர்கல்வி பயில வாய்ப்பு கிடைக்கும்.உடனடி தேர்வு எழுத முன்வரும் மாணவர்கள் நலன் கருதி, பள்ளிக்கல்வித்துறை சிறப்பு வகுப்புகளை நடத்த உத்தரவிட்டுள்ளது. அவரவர் படித்த பள்ளிகளிலேயே இந்த சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த சிறப்பு வகுப்புகளில் தொடர்ந்து பயில்வதன் மூலம் தோல்வியுற்ற மாணவர்கள் நம்பிக்கையுடன் படித்து வெற்றி பெற வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment