Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 20 June 2014

பசங்களை படிக்க எழுப்பி விடுங்க; பெற்றோருக்கு, ஆசிரியர்கள் மூலமாக மொபைல் போனில் அழைப்பு: காலை 5 மணிக்கு இனி போன் வரும்!


கர்நாடகா மாநிலத்தில், 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அம்மாநில அரசு, வித்தியாசமான முயற்சிகளை துவக்கி உள்ளது. அதிகாலையில், மாணவர்களை படிப்பதற்கு எழுப்பி விடும்படி, அவர்களின் பெற்றோருக்கு, ஆசிரியர்கள் மூலமாக மொபைல் போனில் அழைப்பு விடுக்கும்படி, மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக, கிம்மன் ரத்னாகர் பதவி வகிக்கிறார். இவர், தட்சண கன்னடா மாவட்டத்தில், சமீபத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது, 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது குறித்து, பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை கேட்டார். இதன் அடிப்படையில், புதிய முடிவு ஒன்றை அவர் எடுத்துள்ளார். இதன்படி, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு, அவர்களின் ஆசிரியர்கள் மூலமாக, தினமும் அதிகாலை 5:00 மணிக்கு, மொபைல் போன் மூலமாக அழைப்பு வரும். அப்போது, ஆசிரியர்கள், 'உங்கள் பையன் படிப்பதற்கு எழுந்து விட்டானா? இல்லையெனில், எழுப்பிவிட்டு, படிக்கச் சொல்லுங்கள்' என, அறிவுறுத்த உள்ளனர். முதல் கட்டமாக, தட்சண கன்னடா மாவட்டத்தில் மட்டும், இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளனர். இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மாநிலம் முழுவதும், இதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment