Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 6 June 2014

தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜனுக்கு ஆசிரியர் கூட்டணி பாராட்டு


தமிழ்நாடு தேர்வுத்துறையில் புதிய மாற்றங்களை வெற்றிகரமாக செய்த இயக்குனர் தேவராஜனுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு தேர்வுத்துறையில் இந்த கல்வியாண்டு தங்களின் துறையில் பல புதுமைகள் செய்து தேர்வு முறையை மாற்றி மாணவர்களுக்கு எவ்வித குழப்பமுமின்றி தேர்வு நடத்தி அதிக விழுக்காடு தேர்ச்சி சதவீதம் கண்டுள்ளனர்.

இந்தாண்டு அதிகளவில் மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றுள்ளனர். பல குழப்பங்கள், குளறுபடிகளை சீரமைத்து, ஆட்கள் பற்றாக்குறையை சமாளித்த தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜனுக்கு, தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment