எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை 2012-ம் ஆண்டில் தனித்தேர்வர்களாக எழுதியவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை பெறுவதற்கு கடைசிவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறையின் திருச்சி மண்டலத் துணை இயக்குநர் கி. சுபத்ரா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2012, மார்ச், ஏப்ரல் மாதங்களில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுதியவர்கள் தங்களுக்குரிய சான்றிதழ்களை நேரில் பெறாமலும், அஞ்சல் மூலம் அனுப்பி பட்டுவாடா ஆகாமலும், அசல் மதிப்பெண்கள் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்து 2 ஆண்டுக்குப் பின்னர் அழிக்கப்படலாம் என்றுவிதி இருப்பதால், இதுவே அவர்களுக்கு அளிக்கப்படும் கடைசிவாய்ப்பாகும்.
எனவே இதுவரை மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனிதேர்வர்கள் வெள்ளைத்தாளில் மதிப்பெண் சான்றிதழ் கோரும் விவரத்தை குறிப்பிட்டு, தேர்வெழுதிய பருவம், பிறந்த தேதி, தேர்வெழுதிய பாடம் மற்றும் தேர்வு மையத்தின் மையர் ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு, ரூ. 40-க்கான அஞ்சல்வில்லை ஒட்டப்பட்ட சுயமுகவரியிட்ட எழுதிய உறை ஒன்றை இணைத்து, மண்டலத் துணை இயக்குநர், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சி -1 என்ற முகவரிக்கு ஜூலை 12-ம் தேதிக்குள் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment