Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 7 June 2014

கோவை பாரதியார் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு 'பிடிவாரன்ட்'


கோர்ட் அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத, கோவை பாரதியார் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு, 'பிடிவாரன்ட்' பிறப்பித்து, ஆஜர்படுத்த, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான மாநிலத் தகுதித் தேர்வை (செட்), பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) அனுமதியுடன் கோவை பாரதியார் பல்கலை நடத்துகிறது. இதன்படி, 2012 ல் நடந்த 'செட்' தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்ணைவிட, கன்னியாகுமரி செங்கனி, அனிதா, வென்சி கேன்டிடா ஆகியோர் கூடுதல் மதிப்பெண் பெற்றனர். ஆனால், தங்களை தேர்ச்சி பெற்றவர்களாக, பல்கலை அறிவிக்கவில்லை; தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் என, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஐகோர்ட், 'மனுதாரர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்,' என உத்தரவிட்டது. செங்கனி உட்பட 3 பேர்,' ஐகோர்ட் உத்தரவை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் 'செட்' தேர்வு செயலாளர் ஜான்மைக்கேல் ராஜ் நிறைவேற்றவில்லை; அவர் மீது கோர்ட் அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என, மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு உத்தரவு: தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், 4 வாரங்களுக்குள் ஆஜராகி, விளக்கம் அளிக்குமாறு, ஏப்.,24 ல் ஐகோர்ட் உத்தரவிட்டது. அவர், இன்று (நேற்று) ஆஜராகுமாறு, மே 27 ல் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால், ஆஜராகவில்லை. அவருக்கு பல்கலை தரப்பு வக்கீல்,' கோர்ட் உத்தரவை நிறைவேற்றாவிடில், 'வாரன்ட்' பிறப்பிக்க வாய்ப்புள்ளது,' என தெரிவித்துள்ளார். இதை, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பொருட்படுத்தவில்லை; கோர்ட் உத்தரவை மதிக்கவில்லை. அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வகையில், கோவை எஸ்.பி.,'பிடிவாரன்ட்' பிறப்பிக்க வேண்டும். ஜூன் 16 ல், ஆஜர்படுத்த வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment