Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 20 June 2014

பள்ளிகல்வி துறையில் மாணவர்–ஆசிரியர்கள் விபரம் அறிய வசதி: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வீரமணி தொடங்கி வைத்தார்


தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் விபரங்கள், மாணவர்களின் விவரம் மற்றும் அரசு – அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பயன்படுத்துவதற்கு வசதியாக கல்வி தகவல் மேலாண்மை முறைமை என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக தனி இணைய தளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவிலேயே முன்னோடி திட்டமான இதனை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இதன் செயல்பாடு இன்று நடைமுறைக்கு வந்தது. இதற்காக நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் தனி அறை அமைக்கப்பட்டு உள்ளது. இதனை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார். அப்போது தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

கல்விசார் மேலாண்மை முறையை பயன்பாட்டுக்கான சாப்ட்வேர், சர்வர் நிலைப்படுத்தும் பணி அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.

இதில் மாணவர்களின் முழுமையான கல்வித் திறன் வளர்ச்சிக்கு தேவையான பாடங்கள் பற்றிய தகவல்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள், நிபுணர்களின் படைப்புகள், பாட வினா வங்கி, செய்முறை விளக்கம்– குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.

இவற்றை மாணவர்கள் இணைய தளத்தில் டவுன்லோடு செய்து தங்களது கல்வி திறனை வளர்த்துக் கொள்ளலாம்.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா கூறும் போது, ‘‘இந்தியாவில் முதன் முறையாக இத்திட்டம் தமிழகத்தில் முதல்– அமைச்சரால் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 1 கோடியே 35 லட்சம் மாணவர்களின் தகவல், 57 ஆயிரம் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் விவரங்கள் 5½ லட்சம் ஆசிரியர்களின் முழு விவரத்தை தெரிந்து கொள்ளலாம். 10 ஆயிரம் பாடங்கள், வினாக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது’’ என்றார்.

நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment