சேலம் மாவட்டத்தில் இலவச பஸ் பாஸ் பெற விரும்பும் மாணவ, மாணவியர் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வாங்கி வருமாறு அரசு போக்குவரத்து கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (சேலம் கோட்டம்) வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு 2014 - 15ம் கல்வியாண்டில் படிக்கும் அரசு பள்ளி, கல்லூரி மற்றும் ஐ.டி.ஐ. மாணவர்கள், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு வடிவிலான இலவச பஸ் பாஸையே இன்னும் மூன்று மாதத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். நகர பஸ்களில், ஏறி, இறங்கி செல்வதற்கும், நகர பஸ்கள் இல்லாத இடங்களில், புறநகர் பஸ்சில் செல்வதற்கு, மாணவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், துவக்கப்பள்ளியில் இருந்து உயர்நிலைப்பள்ளி, உயர்நிலையில் இருந்து மேல்நிலைப்பள்ளி, புதியதாக பள்ளிகளில் சேருவோர், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் இலவச பஸ் பாஸூக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பினால், அவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு வடிவிலான பஸ் பாஸ் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment