Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 13 July 2014

பிளஸ்2 உடனடி தேர்வு முடிவுகள் வெளியீடு மறுகூட்டலுக்கு 16 வரை விண்ணப்பிக்கலாம்


பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு உடனடி துணைத்தேர்வு ஜூன் மாதம் நடந்தது. இதன் தேர்வு முடிவுகள் நேற்று அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்பட்டன. விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது என தேர்வு துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் சான்றிதழ பெற்றவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வரும் 14 முதல் 16ம் தேதி வரை நேரில் சென்று உரிய கட்டணத்துடன் ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50ஐ கூடுதலாக செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். 

விடைத்தாள் நகல் பெற மொழி பாடங்களுக்கு ரூ.550, பகுதி 2 (ஆங்கிலம்) ரூ.550, பிற பாடங்களுக்கு ரூ.275 கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மறுகூட்டலுக்கு பகுதி 1 மொழி, பகுதி 2 மொழி (ஆங்கிலம்) ரூ.305 கட்டணமும், உயிரியல் (ஒவ்வொன்றுக்கும்), ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்) ரூ.205ம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த பின் வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வுத்துறையால் அறிவிக்கப்படும் தேதியில் விடைத்தாள் நகல்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment