பீகார் மாநிலத்தில் ஏராளமான ஆசிரியர்கள் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு முதல் பீகாரில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கு முன்பு வரை பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ஆசிரியர்களாக பணியாற்றுவோருக்கு நடத்தப்பட்ட தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகளில் சுமார் 20 ஆயிரம் பேர் போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. முதற்கட்டமாக 779 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment