Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 2 July 2014

என்ன தான் ஒரு ஆசிரியர் சிறப்பாக செயல்பட்டாலும் ... Bergin G Kadayal



என்ன தான் ஒரு ஆசிரியர் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரே வகுப்பறையிலுள்ள அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியான குணங்களுடனோ, ஒரே விதமான கல்வி அறிவுடனுனோ வெளிக்கொணர முடியும் என்ற வார்த்தைகளில் எனக்கு உடன்பாடில்லை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு திறமை. அந்த திறமையை கூர்மைப்படுத்தினால் மட்டுமே அவனை சாதிக்க வைக்க முடியும். 

ஒரு சிறிய அறிவியல் சோதனை

மூன்று பானைகளை எடுத்துக்கொள்ளுங்கள். சம அளவில் தண்ணீரை மூன்று பானைகளிலும் நிரப்புங்கள். மூன்று பானைகளையும் அடுப்பில் வைத்து தீமூட்டப் படுகிறது. நன்றாக தண்ணீர் கொதித்ததும் முதல் பானையில் ஒரு உருளைக் கிழங்கு, இரண்டாவது பானையில் ஒரு முட்டையையும் மூன்றாவது பானையில் சிறிது காபி விதைகளையும் போட்டுவிடுங்கள்.

இருபது நிமிடம் கழித்து என்ன நடக்கிறது என கூர்ந்து கவனியுங்கள்.

முதல் பானையில் போடப்பட்ட உருளைக் கிழங்கு பானையில் போடும் முன் கடினமாக தன்மையுடன் இருந்த கிழங்கு இப்போது மென்மையான கிழங்காக மாறி இருக்கும்.

உடைத்தால் திரவமாய் சிதறிப் போய்விடும் முட்டை இரண்டாவது பானைக்குள் போட்டவுடன் இறுகிக்போய் உடைத்தாலும் சிதறாத திடப்பொருளாக மாறியிருந்திருக்கும்.

மூன்றாவது பானையில் போடப்பட்ட காபி விதைகளானது கொதிக்கும் நீரோடு கலந்து சுவைமிகுந்து பருகும் பானமாக மாறியிருக்கும்.

ஒரே வெப்ப நிலையில் கொதிக்கும் நீரில் மூன்று பொருட்களை போடும் போது மூன்று விதமான முற்றிலும் வேறுபட்ட பொருட்கள் கிடைக்கின்றது.

கல்வி பெறும் இடம் இந்த கொதி நீர் மாதிரி
பல்வேறு குணங்களையும் திறன்களையும் உடைய மாணவர்களை அதில் வேக வைக்கிறோம்.
பல்வேறு சுவைகள் வெளிப்படுவது தான் இயல்பு.
அனைத்து பொருட்களும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பது இயல்புக்கு முரணனாது.

எனது வகுப்பில் பயிலும் 90% க்கும் மேலானவர்களை பொறியியல் வல்லுநராக்கவே அவர்கள் பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.

இது இயல்புக்கு முரணானது.

No comments:

Post a Comment