Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 13 July 2014

தேர்ச்சியை அதிகரிக்க தனிக்கவனம் வியூகம்:கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை


10 மற்றும் பிளஸ் 2வில் தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களில் தோல்வி விகிதம் அதிகரிப்பு காரணம் குறித்தும்,தேர்ச்சியை உயர்த்துவது பற்றியும் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் 2013-14 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் 920 பேரும், ஆங்கிலத்தில் 925 பேரும், கணித பாடத்தில் 230க்கும் மேற்பட்டோரும் தோல்வியை சந்தித்தனர்.

மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதம் குறைந்தது. இதற்கான காரணம் குறித்து, சி.இ.ஓ., செந்திவேல் முருகன், டி.இ.ஓ.,க்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பெரும்பாலான மாணவர்களுக்கு கற்பனை திறன்மின்மை,தேர்வு பயம் போன்ற சில காரணமே தோல்வி அதிகரித்திருக்கிறது என, தெரியவந்தது. இவற்றை சரி செய்ய அனுபவம் வாய்ந்த 3 பாட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுடன் கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசிக்கின்றனர். சீனியர் ஆசிரியர்களை அழைத்து, இம்முறை மூன்று பாடத்திலும் தேர்ச்சியை அதிகரிப்பது குறித்தும், அதற்கான பயிற்சியை மாணவர்களுக்கு எப்படி வழங்குவது பற்றி விவாதிக்கின்றனர். தமிழ், ஆங்கில பாடங்களில் தேர்ச்சியை உயர்த்தினாலே ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்பதால் இவ்விரு பாடத்திலும் தனிக்கவனம் செலுத்த சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ. உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ""தமிழ், ஆங்கிலத்திற்கு பழமை பெயர்களை கொண்ட உரைகளை (நோட்ஸ்) படித்தால் போதும், அதிலிருந்து ஏராளமான வினாக்களுக்கு எளிமையாக பதிலளிக்க வாய்ப்பு இருந்தது. தற்போதைய புதிய உரைகளில் கற்பனை திறனுக்கு முக்கியத்துவம் இருப்பதால் சில வினாக் களுக்கு விடையளிக்க கடினமாக உள்ளதாக மாணவர் கள் கூறுகின்றனர். இவற்றை ஆய்வு செய்து இந்த முறை பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 வில் தேர்ச்சியை அதிகரிக்க, எளிதில் புரிய கற்றுக் கொடுத்தல், பயமின்றி தேர்வை சந்திக்க பழக்கப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டம் குறித்து வியூகம் வகுத்து கல்வித்துறை அதிகாரிகள், எங்களை அழைத்து ஆலோசிக்கின்றனர்,'' என்றனர்.

No comments:

Post a Comment