Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 30 September 2013

திருச்சி மாவட்டத்தில் இரண்டு புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் தொடங்க உத்தரவு:

புதிய பள்ளிகளின் விவரம்:

1.மணப்பாறை ஒன்றியம், மொண்டிப்பட்டி ஊராட்சி, களத்துப்பட்டி.

2.மருங்காபுரி ஒன்றியம், ஊணையூர் ஊராட்சி, காப்பக்குடி .

அரசாணையை காண

PLEASE CLICK HERE
https://app.box.com/s/plah2emcln11pnt96lwh

புதிய தொடக்க பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடம் நிரப்ப உத்தரவு

புதிதாக துவங்க உள்ள 54 தொடக்க பள்ளிகளுக்கு, தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள," கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

குடியிருப்பு பகுதிகளில், மக்கள் தொகை 300 பேருக்கு, ஒரு தொடக்க பள்ளி அமைக்கவேண்டும் என்ற அடிப்படையில், மாநிலம் முழுவதும் கடந்தாண்டு, கள ஆய்வு செய்தனர். ஆய்வில், 54 குடியிருப்பு பகுதிகளில் தொடக்கப்பள்ளி இல்லாதது கண்டறியப்பட்டது.

இப்பகுதிகளில், புதிய தொடக்க பள்ளிகளை விரைந்து துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான, ஆசிரியர்கள் சம்பள விபரங்களை தொடக்க கல்வி இயக்குனர், அரசிடம் வழங்கினார். அதன்படி, 2013-14ல் துவங்க உள்ள, தொடக்க பள்ளிகளுக்கென தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நிர்ணயம், தர ஊதியம் குறித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.

அதில், புதிதாக துவங்கும் 54 பள்ளிகளுக்கு, இடைநிலை ஆசிரியருக்கு ரூ.5200-20200+2800; தலைமை ஆசிரியருக்கு ரூ.9300-34,800+4500 என்ற தர ஊதியமும் நிர்ணயித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசாணையை காண

PLEASE CLICK HERE
https://app.box.com/s/plah2emcln11pnt96lwh

18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கேட்ட மனு தள்ளுபடி


 தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் பணி வழங்கவேண்டும் என்று தேசிய கல்வி கவுன்சில் கடந்த 2010ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. 

அதன்படி தகுதி தேர்வு நடத்தப்பட்டு சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டது. தகுதி தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, அதாவது 2010ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த 32 ஆயிரம் ஆசிரியர்களில், 14 ஆயிரம் பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டது. மீதம் உள்ள 18 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து, சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் கலந்து கொண்டவர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை. அவர்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு இதை பின்பற்றவில்லை. இதை பின்பற்ற கோரி சுமார் 100 ஆசிரியர்கள் சார்பாக வக்கீல் காசிநாதபாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை  நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்து கடந்த வாரம் தள்ளுபடி செய்தார். ஆசிரியர்கள் கட்டாயம் தகுதி தேர்வு எழுத வேண்டும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்ற ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பாக வக்கீல் காசிநாத பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், டிவிஷன் பெஞ்ச் உத்தரவின்படி, 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

சிடியில் மாதாந்திர தகவல் அறிக்கை அளிக்க உத்தரவு - கூடுதல் செலவை சமாளிக்க முடியாமல் அங்கன்வாடி சூபர்வைசர்கள் திணறல்


அங்கன்வாடி மையங்களில் ஒரு அமைப்பாளர் மற்றும் ஒரு உதவியாளர் பணியாற்றி வருகின்றனர். வீடுகளில் இருந்து குழந்தைகளை மையத்திற்கு அழைத்து வருவது, சத்துணவு சமைத்து பரிமாறுவது உள்ளிட்ட பணிகளை இவர்கள் செய்து வருகின்றனர். அங்கன்வாடி மையங் களை கண்காணிக்க ஒரு வட்டாரத்திற்கு 4 அல்லது 5 சூபர்வைசர்கள் செயல் பட்டு வருகின்றனர். இவர்கள், தங்களுக்கு கீழுள்ள 30க்கும் மேற்பட்ட மையங்களை கண்காணித்து, மாதாந்திர தகவல் அறிக்கை அளிப்பர். அறிக்கையில் குழந்தைகள், கர்ப்பிணிகள், வளர் இளம்பெண்கள் குறித்த விபரங்களையும், சத்துணவு உருண்டை, மதிய உணவு அளிக்கப்பட்ட விபரங்களையும் தொகுத்து அளிப்பர். சுமார் 10 பக்கங்களில் அளிக்கப்பட்ட இந்த அறிக்கையை இரண்டாக பிரித்து அளிக்க, அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாதாந்திர தகவல் அறிக்கையை வெறும் பேப்பரில் எழுதி சமர்ப்பிக்க, அரசு தடை விதித்துள்ளது. சூபர்வைசர்கள் அருகில் உள்ள கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்று, ஆன்லைனில் இந்த அறிக்கையை தயாரித்து சிடி மூலம் மாதம்தோறும் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால், அங்கன்வாடி சூபர்வைசர்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. ஒரு வட்டாரத்திற்கு குறைந்தபட்சம் ஸீ3 ஆயிரத்திற்கும் மேல் செலவு ஆவதால், அதை எப்படி ஈடுகட்டுவது என தெரியாமல் விழிக்கின்றனர். இந்த சுமையை அங்கன்வாடி பணியாளர்கள் மீது சுமத்துவதால், அவர்களும் திண்டாடுகின்றனர்.

இது குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் கூறுகையில், ‘‘நெல்லை மாவட்டத்தில் மட்டுமே பாளை, நெல்லை, நான்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், தென்காசி என மொத்தம் 21 வட்டாரங்கள் உள்ளன. இவற்றில் நெல்லையிலும், சங்கரன்கோவிலும் நகர பிரிவும் செயல்படுகிறது. இவற்றில் ஒவ்வொரு வட்டாரத்திலும் குறைந்தபட்சம் 4 சூபர்வைசர்கள் உள்ளனர். இவர்கள் மாதாந்திர தகவல் அறிக்கை தயாரிப்பதற்கு மாதம்தோறும் ஸீ3 ஆயிரம் செலவு செய்ய முடியாமல் திணறுகின்றனர். 

எனவே, ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு டேட்டா என்ட்ரி ஆபரேட்டரை அரசே நியமித்து, அவர் மூலமாக அனைத்து கண்காணிப்பாளர்களின் அறிக்கைகளையும் ஆன்லைனில் சேகரிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். குறைவான ஊதியம் பெறும் அங்கன்வாடி பணியாளர்களின் தலையில் கூடுதல் செலவுகளை திணிக்க கூடாது,‘‘ என்றனர். 

எக்ஸ்ட்ரா தகவல்

தமிழகத்தில் மொத்தம் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில், 49 ஆயிரத்து 499 பிரதான மையங்களும், 4 ஆயிரத்து 940 குறு மையங்களும் அடங்கும்.

வாக்காளர் திருத்தப் பட்டியல் சிறப்பு முகாம் - அக்டோபர் 6,20,27 ஆகிய நாட்களில் நடை பெறுகிறது. உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள்.

விடுமுறையால் குறையும் சம்பளம் - சிறப்பு ஆசிரியர்கள் வருத்தம்

அடிப்படை அறிவியல் செயல்பாட்டு பயிற்சி

ஆண்டுக்கு 8 கோடி பேர் மாரடைப்பால் பாதிப்பு

அக்டோபர் 2 ஆம் தேதி மது மற்றும் மாமிசம் விற்க தடை

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு - பிப்ரவரி 16 ஆம் தேதி நடக்கிறது

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வில்லை - கல்வி உரிமை சட்டம் இருந்தும் இந்நிலை

சிறுவர் மற்றும் இளைஞர்களிடம் படைப்பு திறன் அதிகம்.

கோவையில் நடைபெற்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சி - ஒரு லட்சம் பேர் கண்டு வியப்பு.

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் - தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வு முடிவும், இறுதி விடைகளும் ஒரேநாளில் வெளியிடப்படும்

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்புவரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்-,கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சுமார் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர்.

அதேபோல்6 ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பணிபுரியக் கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்-IIஐ கடந்த 18ம் தேதி சுமார் 4 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில்இரண்டு தேர்வுக்களுக்குமான கீ ஆன்சரை’ கடந்த மாதம் டி.ஆர்.பி. இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால்டி.ஆர்.பி. வெளியிட்ட கீ ஆன்சரில்’ ஒரே கேள்விக்கு இரண்டு பதில்கள் வருவதாகவும்சில கேள்விகளில் குளறுபடிகள் இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் பேர் ஆதாரத்துடன் புகார்களை தெரிவித்திருந்தனர்.
இந்தச் சூழலில் புதிய கீ ஆன்சரையும்தேர்வு முடிவையும் டி.ஆர்.பி. எப்போது வெளியிடும் என்றும்புதிய கீ ஆன்சர் வெளியிடும்போதுதவறான கேள்விகளுக்கு கூடுதல் மார்க் வழங்கப்படுமா என்றும் தேர்வர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில்ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு குறித்து டி.ஆர்.பி. அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாள் அனைத்தும் திருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும்புதிய கீ ஆன்சர் பற்றிய வெளியீடும்,அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அனைத்தும் முடிவு செய்யப்பட்டு விட்டது.

ஆனால்தகுதித் தேர்வு முடிவு வெளியிடுவது தாமதமாவதற்கு முக்கியமான காரணம்முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலில் தமிழ்ப் பாடத்தில் 40 கேள்விகள் தவறானது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளதுதான். இந்தவழக்கு தொடர்பாக அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் டி.ஆர்.பி. தெரிவித்துவிட்டது. இந்த வழக்கின் முடிவு இந்த மாதம் 30ம் தேதி தெரிந்துவிடும். அந்த முடிவு வந்தவுடன்அக்டோபர் முதல்வாரத்தில்தயார் நிலையில் உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வு முடிவும் இறுதி கீ ஆன்சரும் ஒரேநாளில் வெளியிடப்படும்’’ என்றார்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடத்திய போராட்டத்தின் விளைவாக துறையின் சார்பாக ஒரு குழு ஏற்படுத்தி 7 அம்ச கோரிக்கை குறித்து அரசுக்கு அறிக்கை அளிப்பதாக இயக்குநர் உறுதி

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடத்திய 4 நாட்கள் தொடர் போராட்டத்தின் விளைவாக இறுதியில் தொடக்கக் கல்வி துறையின் சார்பாக ஒரு குழு ஏற்படுத்தி அதில் 7 அம்ச கோரிக்கை குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைப்பதாக தொடக்கக் கல்வி இயக்குநர் உறுதியளித்துள்ளதாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் கடந்த 4 நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்களின் நியாயமான கோரிக்கைகளை ஜனநாயக அடிப்படையில் தெரிவித்தனர்.ஆனால் இதுகுறித்து தமிழக அரசிடமிருந்து எவ்வித பதிலும் வராததால்,தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்களிடையே கடும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. தொடக்கக் கல்வி இயக்குநர் அளித்த உறுதிமொழியிலும் தங்களுக்கு திருப்தி இல்லையென்றும்இந்த 4 நாட்கள் தொடர் போராட்டத்தின் விளைவாக தொடக்கக் கல்வி துறையிலுள்ள பல்வேறு சங்கங்கள் தங்களை அணுகியுள்ளதாகவும்அடுத்த கட்ட தீவிர போராட்டம் குறித்த முடிவுஅடுத்த நடைபெறவுள்ள மாநில செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தார்.

நன்றி - தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அனைத்து உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் 

THANKS : TAM NEWS