Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 28 November 2013

பள்ளி ஆய்விற்கு வந்து "எஸ்கேப்' ஆன ஆசிரியர்கள்

மதுரையில் பள்ளிகளில் ஆய்வு செய்ததாக கூறி, கையெழுத்து
மட்டும் போட்டுவிட்டு, "எஸ்கேப்' ஆன ஆசிரியர் பயிற்றுனர்களை, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் (எஸ்.எஸ்.ஏ.,) பூஜா குல்கர்னி எச்சரித்தார்.
மாவட்டத்தில் இத்திட்ட செயல்பாடுகள் தொடர்பாக, கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. பூஜா குல்கர்னி தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர்கள் அமுதவல்லி, பார்வதி (எஸ்.எஸ்.ஏ.,), மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி மைய முதல்வர் பாத்திமா திலகராணி, தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆய்வில், எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் வாசிப்பு மற்றும் எழுதும் திறன் 40 சதவிகித்திற்கும் கீழ் இருந்தது கண்டு பல்வேறு கேள்விகளை இயக்குனர் எழுப்பினார். குறிப்பாக, கொட்டாம்பட்டி, உசிலம்பட்டி, மதுரை கிழக்கு, செல்லம்பட்டி, சேடபட்டி, வாடிப்பட்டி ஆகிய "பிளாக்'களில், மாணவர்கள் திறன் மிக குறைவாக இருந்ததை கண்டித்தார்.

மேலும், பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பணிகளை உற்றுநோக்கும் ஆசிரியர் பயிற்றுனர்களையும், மேற்பார்வை செய்யும் கண்காணிப்பாளர்களிடமும் இதுகுறித்து விளக்கம் கேட்டார். ஆனால், அவர்கள் சரியான விளக்கம் அளிக்கவில்லை. இயக்குனர் எழுப்பிய பல கேள்விகளுக்கும் மாறுபட்ட தகவல்கள் மற்றும் புள்ளி விவரங்களை சிலர் அளித்ததால் "டென்ஷன்' ஆனார்.

பள்ளிகள் ஆய்விற்கு சென்ற பலர், வருகை பதிவேட்டில் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு, ஆய்வு செய்யாமல் "எஸ்கேப்' ஆனதை கண்டறிந்து எச்சரித்தார். குறைந்தபட்சம் ஒரு பள்ளியில் இரண்டு மணி நேரமாவது ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க வலியுறுத்தினார்.
பள்ளி செல்லா குழந்தைகள் விவரம் தொடர்பாக சேகரித்த தகவல்களிலும், சில குளறுபடி இருந்தது. "பிளாக்' வாரியாக அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்களுக்கும், ஒருங்கிணைப்பாளர் அளித்த புள்ளிவிவரங்களுக்கும் வித்தியாசம் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
மதுரை மாவட்டத்தில் எஸ்.எஸ்.ஏ., திட்ட செயல்பாடுகளை துரிதபடுத்த வேண்டும் என்று பூஜாகுல்கர்னி அறிவுறுத்தினார்.

புள்ளிவிவரங்களிலேயே ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டிய நிலை - கற்பித்தல் பணியில் பாதிப்பு


பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறை கேட்கும் பல்வேறு புள்ளிவிவரங் களை தருவதிலேயே கவனம் செலுத்த வேண் டிய நிலை உள்ளதால் கற் பித்தல் பணியில் பாதிப்பு ஏற்படுகிறது.

புதிய திட்டம்

பள்ளிக்கல்வித்துறை ஒவ் வொரு பள்ளியிலும் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர் களைப் பற்றிய விவரங்களை தொகுத்து வழங்க அனைத்துப் பள்ளிகளுக்கும் உத்தரவிட்டு உள்ளது. இந்த புள்ளி விவரங் களை தொகுத்து பட்டியல் தயாரிப்பதன் மூலம் எந்தெந்த பள்ளியில் மாணவர்களின் நிலை எவ்வாறு உள்ளது? அந்தப்பள்ளிக்குத் தேவை யான அடிப்படை வசதிகள், கல்வி உதவிப்பணம், இதர நிதி உதவிகள் ஆகியவற்றைக் கண் டறிந்து தேவையான நடவடிக் கையினை எடுக்க உதவுகிறது. இந்த புதிய திட்டத்தை பள் ளிக்கல்வித்துறை அறிமுகப் படுத்தியதன் நோக்கம் பள்ளிக ளில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம் படுத்தி கல்வித்தரத்தையும் உயர்த்த வேண்டும் என்பது தான்.

இதற்காக அனைத்துப்பள் ளிகளிலும் படிக்கும் மாணவ, மாணவிகளைப் பற்றி பல் வேறு புள்ளி விவரங்களை பள்ளிக்கல்வித்துறை கேட்டு உள்ளது. மாணவ, மாணவிக ளின் புகைப்படம், அவர்களது ரத்தப் பிரிவு, ஆதார் அடை யாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை ஆசிரியர்கள் கொடுக்க வேண்டியுள்ளது. மாணவ, மாணவிகளின் புகைப்படங்களை எடுப்ப தற்கோ அல்லது ஆன்-லைன் மூலம் புள்ளி விவரங்களை அனுப்பி வைப்பதற்கோ எந்த வித நிதி ஒதுக்கீடும் இல்லை. பல பள்ளிகளில் மாணவர்களி டமிருந்தே இதற்காக கட்ட ணம் வசூலிக்கப்படும் நிலை உள்ளது. வேறு சில பள்ளிகளில் ஆசிரியர்களே இச்செலவை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமும் உள்ளது. பள்ளிக் கல்வித்துறை இந்தப்பணியை முடிப்பதற்கு குறிப்பிட்ட காலக்கெடு விதித்திருந்தாலும் பணி முழுமையாக முடிவடை யாததால் கால அவகாசம் தொடர்ந்து நீட்டித்து தரப்படு கிறது.

பாதிப்பு

பள்ளிக் கல்வித்துறை இவ் வாறான பல்வேறு புள்ளி விவரங்களை அவ்வப்போது கேட்டு வருவதால் பள்ளித் தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்கல்வித் துறை கேட்கும் புள்ளிவிவரங் களை தருவதிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் அவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதுடன், கற்பித்தல் பணியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. அரசு அதிகாரிகளோ ஆசிரியர்களிடம் இந்தப்பணி யினை செய்ய முடியவில்லை என்றால் எழுதிக்கொடுத்து விட வேண்டியதுதானே என்று கேட்ட போதிலும், அரசுப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் அவ்வாறு எழுதிக் கொடுக்க முடியாமல் தவிப்புடன் இருந்து வருகின்றனர்.

கோரிக்கை

எனவே பள்ளிக்கல்வித்துறை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளியை பற்றிய புள்ளி விவரங்களை சேகரித்து அனுப்புவதற்கு என தனியே பணியாளர்களை நிய மிக்க வேண்டியது அவசியமா கும். இந்த புள்ளி விவரங்கள் மூலம் பள்ளியில் அடிப்படை வசதிகள் மற்றும் கல்வித்தரத் தினை மேம்படுத்த நடவ டிக்கை எடுக்கப்பட்டாலும் கற்பித்தல் பணியில் பாதிப்பு ஏற்படும் போது மாண வர்களின் தேர்ச்சி சதவீ தமும் குறையும் நிலை ஏற்படும். எனவே இந்தப்பணிகளை செய்வதற்கு என தனியாக பணியாளர்களை நியமிக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு முடியாத பட்சத்தில் ஒப்பந்த அடிப்படையிலாவது இந்தப்பணிகளை மேற் கொள்ள வேண்டியது அவசிய மாகும்.

Wednesday, 27 November 2013

EMIS பணியில் தலைமை ஆசிரியர்களின் சிரமங்களை பற்றி The New Indian Express ஆங்கில செய்தித்தாள் வெளியிட்ட செய்தி

 


EMIS data collection overburdens teachers
The ongoing data collection process at schools for the Education Management and Information System (EMIS), which envisages the creation of a comprehensive database on teachers, schools and students has become a headache for teachers in government schools.

The system, if it comes into full swing, will enable the government to closely monitor schools, keep track of students and ensure that welfare measures, including scholarships and grants, reach the needy on time.

But what has bothered the government schools is that the onus of collecting data has been put on their shoulders without any funds to meet the expenses.

They say a separate team or a private agency similar to Aadahar card data collection should be put in place for the purpose.

“We have to upload the students’ photo with his profile. Most schools have no computer facility to take photos using a web camera. A professional photographer charges `15-20 per photo. A school has hundreds of students and this expense has to be borne by the headmaster as no funds are available for the purpose,” said a school headmaster.

The Department of School Education has asked schools to arrange for photos using teachers’ mobile phone or web cameras. But most teachers are not in a position to take photos with the required quality and pixel.

Teachers are spending money and time at Internet cafes to enter and upload data. “While some cafes charge on an hourly basis, some help us to enter data and collect `15-20 per student profile. This turns into a huge sum. Due to power cuts we cannot update on time and when there is power the server may be down and updating cannot be done,” says a teacher.

The lack of proper planning was clear as the data entry was converted to offline from online. While the department claims that 95 per cent of EMIS works are over teachers say it’s not the case.

“Works might have begun at all schools but is not complete because of many factors. Some students are yet to submit full details like Aadhar card number and blood groups,” said Lakshmi, a school teacher.

“If we share the plight with officials they ask us to give it to them in writing that we cannot complete the process. A government servant cannot do it so easily. The solution has to come at policy level from Chennai,” a representative from the Tamil Nadu Graduate Teachers Association said.

While some teachers spent from their pockets, expenses have forced some schools to collect money from children. Private schools follow a different style. “We call photographer for group photos which we usually take in a year and get the other photo done by him at the same time,” said R Vishalakshi, president, Tamil Nadu Private School Association.

While everyone says that the project is a good initiative, the modus operandi should have been different. In years to come all these problems should be sorted out, they feel.



உதவி கல்வி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக மாற்றவேணடும்.

உதவி கல்வி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக மாற்றவேண்டும் என தமிழ்நாடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சியில் அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.பாலகிருஷ்ணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் இதற்கான நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தொடக்கக் கல்வி துறையில் நீதிமன்ற வழக்குகள் அதிகமாக இருப்பதால் மண்டல அளவிலான சட்ட ஆலோசகரை நியமிக்கவேண்டும்.
நீண்ட காலமாக நிலுவையில் பயணப்படியினை உடனடியாக வழங்கவேண்டும். உயர்நிலைப் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கவேண்டும். உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொதுச் செயலர் சி. பாஸ்கரன், பொருளாளர் ப. மாதவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

EMIS பணியில் தலைமை ஆசிரியர்களின் சிரமங்களை பற்றி The New Indian Express ஆங்கில செய்தித்தாள் வெளியிட்ட செய்தியும், கருத்துப் படமும்

வரும் கல்வியாண்டில் பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு கவனம்


2014-15 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிதி வரைவில் பள்ளி செல்லா குழந்தைகளை மீள பள்ளியில் சேர்த்தல் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி கூறினார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டார வள மையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி தலைமையில் விருதுநகர் மாவட்ட வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது: மாணவர்கள் அனைவரும் தொடக்க நிலை வகுப்புகளிலே தமிழ், ஆங்கிலம் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணிதத்திறன்களை முழுமையாக பெற்று உயர் தொடக்க வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கான கற்றல் அடைவுத்திறன் தேர்வுகளை மாதம் ஒரு முறை நடத்தி, பின்தங்கிய மாணவர்கள் மீது அதிக தனிக்கவனம் செலுத்த வேண்டும். தானே கற்றல் உபகரணங்களைப் பயன்படுத்தி மாணவர்களின் அடிப்படை கணிதத்திறன்களை வளர்க்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும். அதற்கான வளப்படுத்துதல் பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான ஆதார அறை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
2014-15 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிதி வரைவில் பள்ளி செல்லா குழந்தைகளை மீள பள்ளியில் சேர்த்தல் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து நம் மாநிலத்திற்கு புலம் பெயர்ந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அவரவர் தாய்மொழியிலேயே பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன என்றார் அவர்.
இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட கூடுதல் முதன்மைகல்வி அலுவலர் சுவாமிநாதன், உதவித்திட்ட அலுவலர் மாடசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பாலமுருகன் மற்றும் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ராமலட்சுமி, மாவட்ட புள்ளியியல் அலுவலர், கணக்காளர் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

EMIS ... EMIS ... EMIS...COLLECTIONS

2014ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை மற்றும் வரையறுக்கப்பட்ட விடுப்பு பட்டியல் - ஒரே தாளில்

TO DOWNLOAD 2014 RESTRICTED HOLIDAY LIST CLICK HERE... 


THANKS TO : TNGTA, KARAIKUDI & TIRUPATTUR OFFICE BEARERS

தொடக்கக் கல்வி - வழக்கறிஞரின் வழிக்காட்டுதலின் படி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, நீதிமன்ற வழக்குகள் குறித்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குநர் உத்தரவு.

5ஆம் வகுப்புக்கான ஆங்கிலம், கணிதம், தகுதி தேர்வில் 10ஆயிரம் ஆசிரியர்கள் பெயில்

பீகார் மாநில அரசு, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தகுதி தேர்வு நடத்தி வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியராக தொடர்ந்து பணியாற்ற முடியும்,
இந்நிலையில் 5ஆம் வகுப்புக்கான ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் ஆங்கிலம், கணிதம், பொதுஅறிவு மற்றும் ஹிந்தி பாடத்தில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தேர்வில் 43.447 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்,
 இதில் 24 சதவீதம் பேர் அதாவது 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெயிலானார்கள், அதே நேரத்தில் 32.833 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மற்றொரு முறை வாய்ப்பளிக்கப்படும் என்றும், அதில் தோற்றால் ஆசிரியராக பணியாற்ற முடியாது என்றும் பீகார் அரசு தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர்கள் இல்லை


 அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பள்ளிக் கல்வித்துறையின் குளறுபடியால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிகள் 2700, மேனிலைப் பள்ளிகள் 2800 இயங்கி வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு படித்து பொதுத் தேர்வு எழுத உள்ளனர். ஆனால் இப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், இரண்டு விதமான அரசு உத்தரவுகள் இருப்பதை காரணம் காட்டி பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இடங்களை நிரப்பாமல் உள்ளனர். 

உயர்நிலை மேனிலை பள்ளிகளில் உள்ள வகுப்புகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு பாட ஆசிரியர் வீதம் நியமிக்க வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் பாடங்களில் உள்ள உள்பிரிவுகளையும் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதன்படி அறிவியல் பாடத்துக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் என்ற உள்பிரிவுகளை கருத்தில் கொண்டும், சமூக அறிவியல் பாடத்தில் வரலாறு, புவியியல், பிரிவுகளை கருத்தில் கொண்டும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் மொழிப்பாடங்களை பொருத்தவரை ஆங்கிலத்துக்கு தனியாக ஆசிரியர் நியமிக்க வேண்டும். அதேசமயம் தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்பும் போது குழப்பங்களை அதிகாரிகள் செய்து வருவதாக தமிழாசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பதவி உயர்வு மூலம் தமிழாசிரியர்கள் நியமிக்கும் போது, 1988ல் போடப்பட்ட அரசு உத்தரவு 686ல் கூறப்பட்டு அம்சங்களை பின்பற்ற வேண்டும் என்று தமிழாசிரியர்கள் கேட்கின்றனர். அதன்படி பி.டி ஆசியர்களுக்கு பதவி  உயர்வு வழங்கும் போது, பணியில் சேர்ந்த காலத்தை பணி மூப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதைப்பின்பற்றி அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. 

ஆனால் பிடி தமிழாசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது மட்டும் 2007ல் போடப்பட்ட அரசு உத்தரவு 161ஐ காரணம் காட்டி பதவி உயர்வு வழங்க மறுப்பதாக தமிழாசிரியர்கள் கூறுகின்றனர். 161 அரசு உத்தரப்படி பி.எட் அல்லது பி.லிட் முடித்திருந்தால் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும்  அல்லது நேரடியாக தமிழாசிரியர் பணி வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. இதனால் உயர்நிலைப் பள்ளிகளில் 1200 தமிழாசிரியர் பணியிடங்களும், மேனிலைப் பள்ளிகளில் 600 தமிழாசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. 

இந்த பிரச்னை குறித்து தமிழாசிரியர்கள் அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் பயன் இல்லாமல் போனதால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் அனைத்து பிரிவுகளிலும் பதவி உயர்வு மற்றும் நேரடி பணி நியமனம் என (தமிழாசிரியர்கள் உள்பட) 13450 ஆசிரியர் பணியிடங்கள் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ளன. குறிப்பாக மொழிப்பாடத்தில் தமிழாசிரியர்கள் இல்லாமல் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு தமிழாசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கூரை, ஓடுவேய்ந்த கட்டிடங்கள் கட்டக்கூடாது - பள்ளிகளுக்கு நிபந்தனைகள் கடுமையாகிறது


இன்றைய 27.11.2013 தினமலரின் கல்வி செய்திகள் பாகம் - 8




அரசு உத்தரவு மற்றும் அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் என்ற ஆணையை பின்பற்றவில்லையென்றால் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அறிவிப்பு

SSA மாநில திட்ட இயக்குனர் அவர்களின் பேட்டி - மத்திய அரசின் SSA -க்கான நிதி குறைப்பு