Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 30 April 2014

பள்ளிசெல்லா குழந்தைகள் 1,184 பேர்; உண்டு - உறைவிட மையம் நடத்த விண்ணப்பம்


ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் இதுவரை நடந்த பள்ளிசெல்லா 
குழந்தைகள் கணக்கெடுப்பின்படி மொத்தம் 1,184 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
உண்டு, உறைவிட மையங்கள் நடத்த ஆர்வமுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி ஆண்டுதோறும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது.தொடர்ந்து, அம்மாணர்வகளுக்கு குறுகிய மற்றும் நீண்ட கால பயிற்சிகள் வழங்கப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். கடந்த கல்வியாண்டில், 3,712 பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் திறன் அடிப்படையில், பள்ளிகளிலும், உண்டு உறைவிட பள்ளிகளிலும் சேர்க்கப்பட்டனர்.நடப்பு 2014 - 15ம் கல்வியாண்டின் கணக்கெடுப்பு பணி அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஏப்., 1ம் தேதி முதல் நடந்து வருகிறது. ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் உள்ள 22 வட்டாரங்களிலுள்ள 3,369 குடியிருப்பு பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இப்பணியில், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் உட்பட 300 பேர் ஈடுபட்டுள்ளனர்.இதுவரை 1,184 பள்ளிசெல்லா குழந்தைகளும், 516 புதிய மாற்றுத்தினாளி மாணவர்களும் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் செயல்பட உள்ள உண்டு, உறைவிட மையங்களைச் சிறப்புடன் நடத்திட ஆர்வமுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) ஞானகவுரி கூறுகயைில், ''கடந்த 25ம் தேதி வரை 1,184 பள்ளிசெல்லா குழந்தைகளும், 516 புதிய மாற்றுத்தினாளி மாணவர்களும் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். இக்குழந்தைகள் வரும் ஜூன் மாதம் முதல் சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்படவுள்ளனர்.2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் செயல்பட உள்ள உண்டு, உறைவிட மையங்களைச் சிறப்புடன் நடத்த ஆர்வமுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் மே 2ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 9ம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் சார்ந்த ஆவணங்களும் இணைக்கவேண்டும்,'' என்றார்.
விண்ணப்பங்கள் எங்கு கிடைக்கும்? : விண்ணப்பங்களை, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்/ மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட திட்ட அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கம், கோவை - 1 என்ற, முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், 97888 58527 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வந்து சேராத தபால் ஓட்டுக்கள்; கல்வி ஊழியர்கள் புலம்பல்


மதுரை மாவட்டத்தில், கல்வித் துறை ஊழியர்கள் பலருக்கும் தபால் ஓட்டுக்கள் போய்ச் சேரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
தேர்தலன்று, மண்டல அலுவலர், வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர் நிலை 1, 2, 3 ஆகிய பணிகளுக்கு, கல்வித்துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு முன்கூட்டியே மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து தபால் ஓட்டுபடிவம் பெறுவதற்கான 12 மற்றும் 12 ஏ படிவங்கள் வழங்கப்படும்.இதை நிரப்பி சம்பந்தப்பட்ட மண்டலதேர்தல் அதிகாரியிடம் வழங்கிய பின், தபால் ஓட்டுக்கான படிவம், ஒவ்வொரு ஊழியருக்கும் அனுப்பி வைக்கப்படும். ஓட்டு எண்ணும் நாளான மே 16ம் தேதி காலை 8 மணிக்குள் அவர்கள் ஓட்டு அளிக்கலாம். ஆனால், ஊழியர்கள் பலருக்கு, தபால் ஓட்டுக்கான படிவம் நேற்று வரை கிடைக்கவில்லை.கல்வித் துறை ஊழியர்கள் கூறியதாவது:ஓட்டுப் பதிவிற்கு முன், தேர்தல் பயிற்சி வகுப்புகளிலேயே 12 மற்றும் 12 ஏ படிவங்கள் வழங்க வேண்டும். ஆனால், மதுரையில் பணிக்கான உத்தரவு பெறப்பட்ட போதுதான் அந்த படிவங்கள் எங்கள் கையில் கிடைத்தன. அதை நிரப்பி தேர்தல் அதிகாரிகளிடம் கொடுத்தும், தபால் ஓட்டுக்கான படிவம் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. விரைவில் கிடைக்க மாவட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போடுவதில் சிக்கல் : அரசியல் கட்சியினர் கலெக்டரிடம் புகார்


தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு இதுவரை தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் கிடைக்காததால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினர் புலம்பி வருகின்றனர்.
தேர்தலில் ஓட்டு போடுவது என்பது தனிமனித ஜனநாய கடமை. உரிமையும் கூட. அதனையொட்டியே தேர்தல் ஆணையம் கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலை திருத்தப்பணி மேற்கொண்டு வந்தது.
இதற்காக சிறப்பு முகாம்களையும் நடத்தியது. தேர்தல் ஆணையத்தின் தீவிர நடவடிக்கையால், தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் 5 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 867 ஆக உயர்ந்தது. இது கடந்த 2011 சட்டசபை தேர்தலைவிட 79 லட்சத்து 97 ஆயிரத்து 568 பேர் கூடுதலாகும்.
வாக்காளர் சேர்க்கையில் தீவிரம் காட்டியது போன்று, ஓட்டு போடுவது அனைவரின் கடமை என்பதை உணர்த்தும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டது. அதேப்போன்று அனைவரும் ஒட்டு போடும் வகையில், ஓட்டுச் சாவடிகளின் எண்ணிக்கையையும், ஓட்டுப்பதிவு நேரத்தையும் அதிகரித்தது.
மேலும், ராணுவத்தில் பணி புரிபவர்களுக்கு "சர்வீஸ்' தபால் ஓட்டு போடும் பொருட்டு, முன் கூட்டியே அவர்கள் பணிபுரியும் இடத்திற்கே ஓட்டுச் சீட்டுகளை தபாலில் அனுப்பி வைக்க உ<த்தரவிட்டது.
மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது ஓட்டுரிமையை பயன்படுத்தும் வகையில் தபாலில் ஓட்டு போடவோ, அல்லது அதே லோக்சபா தொகுதிக்குள் பணிபுரிபவர்கள் என்றால் அவர்கள் பணிபுரியும் ஒட்டுச் சாவடியிலேயே தங்கள் ஓட்டை பதிவு செய்துக் கொள்ளும் வகையில் "தேர்தல் பணிச்சான்று' பயிற்சி வகுப்பின் போதே வழங்க தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி, ராணுவத்தில் பணிபுரியும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 477 பேருக்கு தேர்தலுக்கு முன்பாகவே "சர்வீஸ்' ஓட்டு படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு நேற்று முன்தினம் வரை தபால் ஒட்டு சென்றடையவில்லை.
லோக்சபா தேர்தலுக்காக மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 1,557 ஓட்டுச் சாவடிகளில் 8,000 அரசு ஊழியர்கள் பணியாற்றினர். இவர்களில், சொந்த லோக்சபா தொகுதிக்குள் பணி புரிபவர்கள், தாங்கள் பணியாற்றும் ஓட்டுச் சாவடியிலேயே, தங்கள் ஓட்டை பதிவு செய்து கொள்வதற்கு "தேர்தல் பணிச் சான்று' இறுதிக் கட்ட பயிற்சி வகுப்பின் போது பணி நியமன ஆணையுடன் சேர்த்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், இறுதிக் கட்ட பயிற்சி வகுப்பின் போது பணி நியமன ஆணை வழங்கிய அதிகாரிகள், "தேர்தல் பணிச் சான்று' தயாராகவில்லை. அதனால், தபால் ஓட்டு போட வசதி ஏற்படுத்தித் தருவதாகக் கூறி ஊழியர்களை ஓட்டுச் சாவடிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்களுக்கு இதுவரை தபால் ஓட்டுகள் அனுப்பி வைக்கப்படவில்லை.
இதனால், மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களில் பெரும்பாலானோர் ஓட்டு போட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை அறிந்த அரசியல் கட்சியினர், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஓட்டுகள் பறி போய் விட்டதே என புலம்பி வருகின்றனர்.
அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு கிடைக்காத தகவலை அறிந்த கம்யூ., கட்சியினர் இதுகுறித்து கலெக்டர், கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி உதவி தேர்தல் அலுவலர்களை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

கல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்திருந்தால் பணியில் சலுகை: ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டப்படி, ஒரு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை, தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது. முதுகலை பட்டம் தமிழ் வழியிலும், இளங்கலை படிப்பை ஆங்கில வழியில் முடித்திருந்தாலும், ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது,' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
கமுதி நீராவியை சேர்ந்த மாரியம்மாள், ஏற்கனவே தாக்கல் செய்த மனு: தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, எம்.காம்.,- பி.எட்., தேர்ச்சியடைந்தேன். ஆங்கில வழியில் பி.காம்., தேர்ச்சியடைந்தேன். முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்காக, 2012--13ல் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்திய தேர்வில் பங்கேற்றேன். 'கட்-ஆப்' மதிப்பெண் 92. எனக்கு 102 மதிப்பெண் கிடைத்தது. டி.ஆர்.பி., தரப்பில், 'நீங்கள் முதுகலை (எம்.காம்.,) தமிழ் வழியிலும், இளங்கலை (பி.காம்.,) ஆங்கில வழியிலும் படித்துள்ளதால், பணி நியமனம் வழங்க முடியாது,' என நிராகரித்தனர். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். தனி நீதிபதி: தமிழ் வழியில் படித்தவர்களுக்கான சிறப்புச் சலுகையை, மனுதாரருக்கு வழங்க வேண்டும். முதுகலை பட்டம் தமிழ் வழியிலும், இளங்கலை படிப்பை ஆங்கில வழியில் முடித்திருந்தாலும், மனுதாரரின் பிற தகுதிகள் திருப்தி அளிக்கும்பட்சத்தில், அவருக்கு டி.ஆர்.பி., பணி வழங்க வேண்டும், என்றார். இதை எதிர்த்து அகிலா உட்பட 6 பேர்,' தனி நீதிபதியின் உத்தரவுப்படி ஏற்கனவே, தேர்வு செய்யப்பட்டவர்களின், ஒட்டுமொத்த பட்டியலையும் டி.ஆர்.பி., மாற்றியமைத்தது. இதில், மாரியம்மாளின் பெயரை சேர்த்து வெளியிட்டது. இதனால் ஏற்கனவே, தேர்வு பெற்ற எங்களது பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது. எங்களுக்கு பணி கிடைக்கவில்லை. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,' என மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி கொண்ட பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. அரசு சிறப்பு வக்கீல் சண்முகநாதன், மாரியம்மாள் சார்பில் வக்கீல் ஐசக்மோகன்லால் ஆஜராகினர்.
நீதிபதிகள்:
தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தை, அரசு 2010 ல் அமல்படுத்தியது. அதன்படி, ஒரு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை, தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது. இவ்வழக்கைப் பொருத்தவரை, முதல் வகுப்பிலிருந்து பட்ட மேற்படிப்பு மற்றும் பி.எட்.,வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே, சலுகை வழங்குவதா? அல்லது பட்டமேற் படிப்பு, பி.எட்., மட்டும் தமிழ் வழியியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதா? என தீர்மானிக்க வேண்டியுள்ளது. இவ்வழக்கில், ஆசிரியர் பணிக்கு தகுதியாக, மாரியம்மாள் தமிழ் வழியில் எம்.காம்.,மற்றும் பி.எட்., படித்துள்ளார். சட்டம் அமலாவதற்கு முன் பலர் தமிழ், ஆங்கில வழியில் படித்திருக்கலாம். அமலானபின், தமிழ் வழி கல்விக்கு மாறியிருக்கலாம். இவ்வாறு தமிழ் வழிக்கு மாறி, படித்ததால் பணி வழங்க முடியாது என கூற முடியாது. தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என்றனர்.

ஆசிரியர் தேர்வில் 'கிரேடு' முறை ரத்து: ஐகோர்ட்

ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட, 'கிரேடு' முறையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், தகுதி தேர்வை நடத்துகிறது. இதில், மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 60 சதவீதம்பெற வேண்டும். மீதி, 40 சதவீதம், கல்வித் தகுதிக்காக என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணி என்றால், பிளஸ் 2 தேர்வுக்கு, 15 மதிப்பெண்; ஆசிரியர் பட்டய படிப்புக்கு, 25 மதிப்பெண் என, 40 மதிப்பெண். பட்டதாரி ஆசிரியர் பணி என்றால், பிளஸ் 2 தேர்வுக்கு, 10; பட்டப் படிப்புக்கு, 15; பி.எட்., படிப்புக்கு, 15, என, 40 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பிரச்னையில்லை. அதற்கான, 'கிரேடு' முறைக்கு தான், தேர்வர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது, பிளஸ் 2 தேர்வுக்கு, நிர்ணயிக்கப்பட்ட, 15 மதிப்பெண்ணில், பிளஸ் 2 தேர்வில், 90 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றிருந்தால், 15; மதிப்பெண், 80ல் இருந்து, 90 சதவீதம் வரை பெற்றிருந்தால், 12; மதிப்பெண், 70ல் இருந்து, 80 சதவீதம் வரை, 9; மதிப்பெண், 60ல் இருந்து, 70 சதவீதம் வரை, 6; மதிப்பெண், 50ல் இருந்து, 60 சதவீதம் வரை, மூன்று மதிப்பெண் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தகுதி தேர்விலும், 'கிரேடு' முறை கொண்டு வரப்பட்டது. கடந்த, பிப்ரவரியில், பள்ளி கல்வித் துறை ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், இடஒதுக்கீட்டுப் பிரிவில் வருபவர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில், 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்பட்டது. அதாவது, இடஒதுக்கீட்டுப் பிரிவில் வருபவர்கள், 55 சதவீத மதிப்பெண் பெற்றால், தேர்ச்சி பெறுவர். கிரேடு முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்குவதை எதிர்த்தும், தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண் பெறப்பட்டதோ அதன் அடிப்படையில், 'வெயிட்டேஜ்' நிர்ணயிக்கக் கோரியும், 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்பட்டதை எதிர்த்தும், 2012ல் நடந்த தேர்வுக்கு, மதிப்பெண் தளர்வை விரிவுபடுத்த கோரியும், சென்னை ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: தேர்ச்சி மதிப்பெண்ணை, 5 சதவீதம் தளர்த்த வேண்டும் என, பல தரப்பிலும் வந்த கோரிக்கையை பரிசீலித்து, மதிப்பெண் தளர்த்துவதில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டதாக, தமிழக அரசு பதிலளித்துள்ளது. எனவே, அரசு பரிசீலிக்கவில்லை எனக் கூற முடியாது. தகுதி தேர்வு, போட்டி தேர்வு அல்ல; அது, தகுதி பெறுவதற்கான தேர்வு. மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள, ஆசிரியர்கள் மீண்டும் தேர்வை எழுதலாம். இடஒதுக்கீடு பிரிவினருக்காக, தேர்ச்சி மதிப்பெண் சதவீதத்தை குறைப்பதற்கு, அரசு, கொள்கை முடிவு எடுத்துள்ளது. அரசின் அதிகாரத்தை எதிர்த்து, வழக்கு தொடரப்படவில்லை. எனவே, 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்பட்டது செல்லும். மதிப்பெண் தளர்த்தியதை, 2012ல் நடந்த, ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் அமல்படுத்த வேண்டும் என்பதை ஏற்க முடியாது. முன் தேதியிட்டு அமல்படுத்தினால், குழப்பம் ஏற்படும். ஏற்கனவே நியமனம் பெற்றவர்கள் பாதிக்கப்படுவர். ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்க, 'கிரேடு' முறையை கையாளுவதில், எந்த அறிவியல் பூர்வ பின்னணியும் இல்லை. இதனால், ஏராளமான முரண்பாடுகள் தான் ஏற்படும்.
கிரேடு முறைப்படி, தகுதி தேர்வில், 60 சதவீத மதிப்பெண் பெறுபவருக்கும், 69 சதவீதம் பெறுபவருக்கும், ஒரே, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் என, 42 வழங்கப்படுகிறது. அதேநேரத்தில், 69 சதவீதம் எடுத்தவருக்கு, 42 மதிப்பெண், 70 சதவீதம் எடுத்தவருக்கு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண், 48 என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, பெரிய முரண்பாடு. எனவே, பிளஸ் 2, பட்டயப் படிப்பு, தகுதி தேர்வில் பெறும், ஒவ்வொரு சதவீத மதிப்பெண்ணுக்கும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக, 0.15, 0.25, 0.60 என்ற அடிப்படையில் வழங்க வேண்டும். இதை பின்பற்றினால், முரண்பாடு, பாகுபாடு வராது. இது, அறிவியல் பூர்வமானது. இதை, பரிந்துரையாக தான் அளிக்கிறேன். இதை பின்பற்றலாமா என்பதை அரசு தான் பரிசீலிக்க வேண்டும். அரசு கொண்டு வந்த, 'கிரேடு' முறை, தன்னிச்சையானது, பாரபட்சமானது. அது, ரத்து செய்யப்படுகிறது. நான் கூறியுள்ள முறையையோ அல்லது அறிவியல் பூர்வமான வேறு முறையையோ, அரசு பின்பற்ற வேண்டும். எனவே, 'வெயிட்டேஜ்' மதிப்பெண்கள் வழங்குவதற்கு, ஏதாவது ஒரு அறிவியல் பூர்வமான முறையை, விரைவில் கொண்டு வர, அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதன்படி, ஆசிரியர்கள் தேர்வு நடக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கும் பணி இழுபறி: பல்வேறு வழக்குகளால் கையைப்பிசைகிறது கல்வித்துறை

பல்வேறு வழக்குகள், குழப்பமான உத்தரவுகளால், பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யும் விவகாரம், ஜவ்வாக இழுக்கிறது. ஜூனில் பள்ளிகள் திறக்கின்றன. ஆனால், புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும்.அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், 12 ஆயிரம் பேரை நியமனம் செய்யும் பணி, பல மாதங்களாக, ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது.
சிக்கல்
கடந்த ஆண்டு மத்தியில் நடந்த, முதுகலை ஆசிரியர் தேர்வும், கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வும் (டி.இ.டி.,), இதுவரை, நிறைவு பெறவில்லை.முதுகலை ஆசிரியர்களில், தமிழ் ஆசிரியர்கள் மட்டும், நியமனம் செய்யப்பட்டு விட்டனர். இதர பாடங்களுக்கான ஆசிரியர் தேர்வு, இடியாப்ப சிக்கலாக உள்ளது. எந்த தேர்வை எடுத்தாலும், நீதிமன்ற வழக்கில் இருப்பதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) கூறுகிறது.
இதனால், முதுகலை ஆசிரியர்கள், எப்போதுநியமனம் செய்யப்படுவர் என, தெரியாத நிலை உள்ளது.டி.இ.டி., தேர்வில், மதிப்பெண் சலுகை அளித்ததன் காரணமாக, இரண்டாவது சுற்று, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது.
கூடுதலாக தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, வரும், 6 முதல், 12ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
புதிய ஆசிரியர்கள்
இந்த தேர்வு தொடர்பாகவும், வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஜூன், 2ம் தேதி பள்ளிகள் திறந்ததும், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத நிலை உள்ளது.குறிப்பாக, முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதில் ஏற்பட்டுள்ள கால தாமதத்தால்,பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும்.அதேபோல், பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யாததால், 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'வழக்குகள், விரைவில் முடிவுக்கு வந்து விடும். மாணவர்கள் கல்வி பாதிக்காத அளவிற்கு, புதிய ஆசிரியர்களை, விரைந்து நியமனம் செய்ய, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, தெரிவித்தது.

Tuesday, 29 April 2014

கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஒன்றாம் வகுப்பில் இருந்துதான் கல்வி கட்டணம் கிடைக்கும்


மும்பையில், கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பில் இருந்து தான் கல்விக்கட்டணம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளியும் 25 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்கவேண்டும். இந்த இடங்களை அரசு நிர்வாகம் நிரப்பும். தற்போது மும்பையில் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் ஆன்லைனில் நிரப்பப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் நர்சரியிலேயே சேர்க்கப்பட்டு விடுகின்றனர். ஆனால் மாநில துவக்க கல்வி இயக்குனர் மகாவீர் மானே இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பில் இருந்து தான் கல்வி கட்டணம் பள்ளிகளுக்கு அரசால் வழங்கப்படும்.

நர்சரி, ஜூனியர் கேஜி, சீனியர் கேஜி வகுப்புகளுக்கு பள்ளிகள் இலவசமாக கல்வி கற்றுக்கொடுக்கவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவுக்கு கல்வி நிறுவனங்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு எப்படி தங்களால் இலவச கல்வி கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக மிகப்பெரிய கல்வி நிறுவனம் ஒன்றின் தலைவர் கூறுகையில், இந்த ஆண்டு கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 46 மாணவர்களை சேர்த்துள்ளோம்.

இதில் ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு 22 ஆயிரம் கட்டணம் வசூலிக்கிறோம். ஆனால் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 10.12 லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும். இதை எப்படி பள்ளிகள் தங்களது சொந்த பணத்தில் இருந்து போட முடியும். அரசு ஆரம்பத்தில் இருந்தே கல்வி கட்டணத்தை கொடுக்கவேண்டும் என்று தெரிவித்தார். இது குறித்து மகாவீர் மானேயிடம் கேட்டதற்கு, கல்வி நிறுவனங்களின் கவலை குறித்து மாநில கல்வி செயலாளருடன் பேசி முடிவு செய்யப்பட இருக்கிறது.

மாநில அரசிடம் இது தொடர்பாக விளக்கம் கோரப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே முன்னதாக மானேயை சில தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சந்தித்து கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் 9 ஆயிரம் நன்கொடையும், 6 ஆயிரம் கல்வி கட்டணமும் கேட்பதாக புகார் செய்தனர். அவர்களின் புகாரை தொடர்ந்தே புதிய உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி வரை ஆன்லைனில் அட்மிஷன் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியீடு பள்ளி கல்வித்துறை உத்தரவு

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் முகாம்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஆறாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையும், பிளஸ் 1 வகுப்பு விடைத்தாள்களையும் அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.
வேலூர் மாவட்டத்தில் 22 ஒன்றியங்களில் 1628 தொடக்கப்பள்ளிகளும், 509 நடுநிலைப்பள்ளிகளும், 197 உயர்நிலைப்பள்ளிகளும், 208 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.
இதில் பிளஸ் 1 வகுப்புக்கு தகுதிவாய்ந்த முதுகலை மற்றும் தொழில் கல்வி ஆசிரியர்களை கொண்டும் உரிய ஆசிரியர்கள் இல்லையென்றால் அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்களை வரவழைத்தும் தலைமை ஆசிரியர்கள் முழுபொறுப்பேற்று மதிப்பீடு செய்ய உத்தரவிட்டது.
மேலும் பிளஸ் 1 தேர்ச்சி முடிவுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்ற பின்பே வெளியிட வேண்டும்.

இதில் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களில் 5 சதவீதம் தலைமை ஆசிரியரே மறுமதிப்பீடு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான தேர்ச்சி முடிவுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்று மே 5ம் தேதிக்குள் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியிட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான கூட்டம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வேலூரில் நடைபெற உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

செயல்வழிக்கற்றல் மூலம் தமிழகம் முழுவதும் 750 ஆங்கிலவழி தொடக்கப் பள்ளிகள் துவக்க திட்டம் அதிகாரி தகவல்

தமிழகம் முழுவதும் செயல் வழிக்கற்றல் 2006 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. செயல்வழிக் கற்றல் தமிழ்நாட்டில் முதலில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்ட பின் ஒன்றியத்திற்கு 10 பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
குழந்தைகளின் ஆரம்பகால கல்வி செயல்வழியிலேயே நடைபெற வேண்டுமென்பது பல காலமாக கல்வியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெரும்பாலான நாடுகளின் வெற்றிகரமாக இயங்கும் அடிப்படை கோட்பாடாகும்.

இதனை தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை மாணவர்கள் செயல்வழிக் கற்றல் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. 2009ம் ஆண்டு செயல்வழிக் கற்றல் என்ற பாடத்திட்டம் எளிமையான செயல்வழிக் கற்றல் என்று மாற்றப்பட்டது. ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் கடந்த 2013ம் ஆண்டு ஆங்கிலவழி செயல்வழிக் கற்றல் திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டுவரப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் முதலில் 10 பள்ளிகளில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தன. ஆங்கில செயல்வழிக் கற்றலில் மாணவர்களின் கற்றல் திறனும் அதிகரித்தன.
வேலூர் மாவட்டத்தில் 22 ஒன்றியங்களில் 1628 தொடக்கப்பள்ளிகளும், 509 நடுநிலைப்பள்ளிகளும், 197 உயர்நிலைப்பள்ளிகளும், 208 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. கடந்த ஆண்டு ஆங்கில வழிக்கல்வி தொடக்கப்பள்ளியில் 245 பள்ளிகள் உள்ளன. இதில் 245 பள்ளிகளில் 5617 மாணவ, மாணவிகள் படிக்கின்றார்கள். ஆனால் மொத்தம் 2137 பள்ளிகளில் 245 பள்ளிகளில் மட்டுமே உள்ளன.
அரசு பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகளிலேயே ஆங்கில வழிக்கற்றலை அரசு கொண்டு வந்ததால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க தொடங்கியது. இத்திட்டத்தில் செயல்வழிக் கற்றல் முறையில் ஒவ்வொரு முறையில் குழந்தையும் தன்னுடைய வேகத்தில் பயிலவேண்டும் என்பது நியதி.
ஏனென்றால் கற்றல் என்பது எல்லோருக்கும் சமச்சீராக அமையும் என்று கிடையாது. ஒவ்வொரு குழந்தையும் உடலாலும், மனதாலும், அறிவாலும், சமுதாய நோக்கிலும் தனிப்பட்டவன் இதில் கற்றல் அட்டை என்பது ஒரு முக்கிய அம்சமாகும்.
கற்றல் ஏணியும் ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் புரிதல் எங்கு இருக்கிறது என்பதை தெரிவிப்பதற்கும், ஒவ்வொரு குழந்தையும் புரிதலோடு படிக்கவும், அவர்களுடைய வேகத்தில் படிக்கவும், எதை கற்றல் வழிகளில் சேர்த்தால் அவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டதாக அமையவேண்டும் என்று இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதையொட்டி 20142015 கல்வி ஆண்டில் தமிழகம் முழுவதும் 750 பள்ளிகள் புதிதாக தொடங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளின் எண்ணிக்கை:
ஆலங்காயம் 25
அணைக்கட்டு 10
அரக்கோணம் 8
ஆற்காடு 14
குடியாத்தம் 16
ஜோலார்பேட் 15
கே.வி.குப்பம் 1
கந்திலி 20
கனியம்பாடி 5
காட்பாடி 17
காவேரிபாக்கம் 15
மாதனூர் 13
நாட்றம்பள்ளி 6
நெமிலி 13
பேர்ணாம்பட்டு 7
சோளிங்கர் 13
திருப்பத்தூர் 10
திமிரி 8
வேலூர் அர்பன் 8
வேலூர் ரூரல் 9
கிழக்கு வாலாஜா 6
மேற்கு வாலாஜா 6
தெலுங்கு பள்ளிகள்:
குடியாத்தம் 3
சோளிங்கர் 2

2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க நீதிபதி உத்தரவு


2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் ராவ் & ரெட்டி வாதாடினார். அவர் 2013 முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என வாதிட்டார். இதனை விசாரித்த நீதியரசர் நாகமுத்து அவர்கள், 2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். தீர்ப்பின் நகல் விரைவில் வெளியிடப்படும். வழக்கு எண். W.P.NO:9247.


தகவல்: .C.சரவணன், மாவட்ட செயலாளர், அனைத்திந்திய ஆசிரியர் பேரவை, வேலூர் மாவட்டம்.

அரசு பாடபுத்தகம் விற்பனை: மாவட்ட கல்வி அலுவலக உதவியாளர் சஸ்பெண்டு


திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் உள்ள பழனி கல்வி மாவட்ட அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் சிவசண்முகம். இவர் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த அரசு பழைய பாட புத்தகத்தை தன்னிச்சையாக எடுத்து விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.

அதன்பேரில் பழனி கல்வி மாவட்ட அலுவலர் கலையரசி மேல் நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குடோனில் இருந்து வெளியிடங்களுக்கு புத்தகங்களை விற்பனை செய்த இளநிலை உதவியாளர் சிவசண்முகத்தை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து பழனி கல்வி மாவட்ட அலுவலர் கலையரசி கூறியதாவது:–

கடந்த 2005–06–ம் கல்வி ஆண்டுக்கான பாடபுத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கியது போக எஞ்சிய புத்தகங்கள் பழனி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டு இருந்தது. அந்த புத்தகங்கள் அனைத்தும் அரசு செய்தித்தாள் நிறுவனமான டி.என்.பி.எல்.–க்கு செல்லவேண்டியவை.

இதனை இளநிலை உதவியாளர் தன்னிச்சையாக முடிவு செய்து சுமார் 2000 புத்தகங்களை தனியாருக்கு விற்பனை செய்து உள்ளார் என்றார்.

அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் சென்றடையவில்லை: பாஜக புகார்


தேர்தலில் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் இதுவரை சென்றடையவில்லை என கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொருளாளர் வே.ராஜரத்தினம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாருக்கு புகார் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

கடிடத்தில் சிதம்பரம் மக்களவை தனித் தொகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்த தபால் வாக்குகளை பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளனர். இதில் பெரும்பான்மையான ஊழியர்களுக்கு இதுவரை தபால் வாக்குகள் சென்றடையவில்லை என எங்களது கட்சிக்கு புகார் வந்துள்ளது. எனவே தேர்தல் ஆணையம், அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகளை விரைந்து அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 50 பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு

                

பள்ளிகளில் நுழைவுத் தேர்வு கூடாது: மெட்ரிக் இயக்குனரகம் எச்சரிக்கை

இரட்டைப் பட்டம் -உச்ச நீதிமன்றத்தில் மனுதாரராக ஆஜராக போவதில்லை என மூன்று வருட பட்டப்படிப்பு ஒருங்கணைபாளர் அதிரடியாக அறிவிப்பு


உச்ச நீதிமன்றத்தில் மனுதாரராக ஆஜராக போவதில்லை என மூன்று வருட பட்டப்படிப்பு ஒருங்கணைபாளர் தெரிவித்துள்ளனர்.மூன்று வருட பட்டப்படிப்பு படித்தவர்கள் போதுமான அளவிற்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் உடனடியாக விலகுகிறோம் என தெரிவித்து உள்ளனர்.



உச்ச நீதிமன்றத்தில் எந்த விதமான தீர்ப்பு வந்தாலும் அதனை இன்முகத்துடன் வரவேற்றுகின்றோம் .மேலும் இவ்வழக்கு தொடர்பாக இனி எங்களை தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் இதுவரை ஒத்துழைப்பு நல்கிய நல் இதயங்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.