Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 30 April 2014

வந்து சேராத தபால் ஓட்டுக்கள்; கல்வி ஊழியர்கள் புலம்பல்


மதுரை மாவட்டத்தில், கல்வித் துறை ஊழியர்கள் பலருக்கும் தபால் ஓட்டுக்கள் போய்ச் சேரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
தேர்தலன்று, மண்டல அலுவலர், வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர் நிலை 1, 2, 3 ஆகிய பணிகளுக்கு, கல்வித்துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு முன்கூட்டியே மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து தபால் ஓட்டுபடிவம் பெறுவதற்கான 12 மற்றும் 12 ஏ படிவங்கள் வழங்கப்படும்.இதை நிரப்பி சம்பந்தப்பட்ட மண்டலதேர்தல் அதிகாரியிடம் வழங்கிய பின், தபால் ஓட்டுக்கான படிவம், ஒவ்வொரு ஊழியருக்கும் அனுப்பி வைக்கப்படும். ஓட்டு எண்ணும் நாளான மே 16ம் தேதி காலை 8 மணிக்குள் அவர்கள் ஓட்டு அளிக்கலாம். ஆனால், ஊழியர்கள் பலருக்கு, தபால் ஓட்டுக்கான படிவம் நேற்று வரை கிடைக்கவில்லை.கல்வித் துறை ஊழியர்கள் கூறியதாவது:ஓட்டுப் பதிவிற்கு முன், தேர்தல் பயிற்சி வகுப்புகளிலேயே 12 மற்றும் 12 ஏ படிவங்கள் வழங்க வேண்டும். ஆனால், மதுரையில் பணிக்கான உத்தரவு பெறப்பட்ட போதுதான் அந்த படிவங்கள் எங்கள் கையில் கிடைத்தன. அதை நிரப்பி தேர்தல் அதிகாரிகளிடம் கொடுத்தும், தபால் ஓட்டுக்கான படிவம் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. விரைவில் கிடைக்க மாவட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment