Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 29 April 2014

கல்வி கட்டண விவரங்களை எழுதி வைக்க வேண்டும்: பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவு

தனியார் பள்ளிகளின் வெளியே கல்வி கட்டண விபரங்களை தெளிவாக எழுதி வைக்க வேண்டும்‘ என கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கோடை விடுமுறைக்கு பின் வகுப்புகள் ஜூன் 2ம் தேதி திறக்கப்பட உள்ளன. பிளஸ்2 ரிசல்ட் வரும் 9ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றின் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம் நேற்று அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் முன்னிலையில் நடந்தது. இதில், பிளஸ்2 ரிசல்ட் வரும் 9ம் தேதி வர உள்ளதால், மாணவர்களின் பதிவு எண் தொடர்பாக எந்த குழப்பங்களும் இருக்கக்கூடாது.
அதில் ஏதாவது திருத்தம் இருந்தால் உடனடியாக தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். 6 முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் தேர்வு முடிவுகளை வழக்கம் போல் வெளியிடலாம். 9ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து பள்ளியின் கல்விக்குழு கூடி ஆலோசித்து முடிவு செய்யலாம். தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25% இடஒதுக்கீட்டுதாரர்களுக்கு சீட் வழங்குவதை அனைத்துப் பள்ளிகளும் உறுதி செய்ய வேண்டும். எல்கேஜி, மற்றும் 6ம் வகுப்பிற்கு உள்ள மொத்த மாணவர்கள் சேர்க்கை எவ்வளவு? அதில் 25% இடஒதுக்கீடு எண்ணிக் கை எவ்வளவு மற்றும் ஒவ்வொரு வகுப்பிற்கும் கல்விக்கட்டணம் எவ்வளவு என்பது போன்ற விபரங்களை பள்ளி நிர்வாகிகள் தங்கள் பள்ளி வளாகம் முன் பெற்றோர்கள், மாணவர்கள் பார்வையில் படும் வகையில் எழுதி வைக்க வேண்டும்.
இது தொடர்பான புகார்கள் பெற்றோரிடம் இருந்து வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிளஸ்2 ரிசல்ட் வெளியானதும் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்வதற்கு இந்த ஆண்டும் ஆன்லைன் முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மாணவர்களின் ரேஷன்கார்டு எண், ஜாதி சான்று எண் ஆகியவைகளை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். மாவட்டங்களில் ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறித்த விபரத்தை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment