தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த 1–ந் தேதி முதல் 2014-2015-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பள்ளிகளும், ஏப்ரல் மாதத்தில்தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருந்த நிலையிலும், தனியார் பள்ளிகள் கடந்த ஜனவரி மாதமே விண்ணப்பங்கள் வழங்கி மாணவர் சேர்க்கையை தொடங்கி விட்டன.
அதேபோல, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக நேர்காணல் மற்றும் நுளைவுத்தேர்வுகளை நடத்தக்கூடாது, இது கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தவறு என்றும் பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்தநிலையில், கோவை “வெரைட்டி ஹால்” சாலையிலுள்ள போலீஸ் குடியிருப்பு அருகில் உள்ள சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளியில், 6, 7 மற்றும் 8–ம் வகுப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றுள்ளது.
முந்தைய வகுப்புகளில் மாணவர்கள் படித்த பாடப்புத்தகங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கேளவிகளை கொண்டு 30 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.
இந்த நிலையில், மேற்படி பழியில் மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதாக கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கல்வி அதிகாரிகள் நுழைவுத்தேர்வு நடத்துவதை நிறுத்தினார்கள். இது தொடர்பாக நுழைவுத்தேர்வு நடத்திய அந்த பள்ளிக்கு நோட்டீசு வழங்கப்பட்டது.
இது தொடர்பாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வு நடத்துவது தவறாகும். இதன்படி நுழைவுத்தேர்வு நடத்திய சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளிக்கு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. இதுபோல் விதிமுறை மீறும் பள்ளிகளுக்கும் நோட்டீசு வழங்கி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
No comments:
Post a Comment