கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், ஏழை எளிய குழந்தைகளை இந்த கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகள் சேர்க்க வேண்டும் என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 2014-2015ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மே மாதம் நடத்த வேண்டும் என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்து இருந்தது. ஆனால் சில பள்ளிகளில் ஏற்கெனவே மாணவர் சேர்க்கை நடந்து முடிந்துவிட்டது. இத தவிர சில பள்ளிகள், மாணவர் சேர்க்கையின்போது நுழைவு தேர்வும் நடத்துகின்றனர்.
இது தொடர்பாக பல புகார்கள் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநருக்கு வந்தன. அதன் பேரில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் தனியார் பள்ளிகளுக்கு கடுமையான சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி மே மாதம்தான் சேர்க்கை நடத்த வேண்டும். நுழைவுத் தேர்வுகள் நடத்தக்கூடாது என்றும் கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும் மாணவர் சேர்க்கையின்போது 25 சதவீதம் ஏழை எளிய பிரிவு குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. பள்ளி சேர்க்கைக்கான மாதிரி விண்ணப்ப படிவத்தையும் அரசு வெளியிட்டுள்ளது. இந்த படிவங்களை அரசு இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment