Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 26 April 2014

வாக்கு சாவடியில் எந்த வசதியும் இல்லை : தேர்தல் பணியில் அவதிப்பட்ட ஆசிரியைகள்

பல கோடி செலவு செய்து வாக்குப்பதிவு நடத்தும் தேர்தல் ஆணையம், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பலமுறை கோரிக்கைகள் வைத்தும் அது நிறைவேற்றப்படாமலே உள்ளது. குறிப்பாக வாக்குப்பதிவின்போது பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எந்த அடிப¢படை வசதியும் செய்து தரப்படுவதில்லை என புகார் உள்ளது. இம்முறை தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போதும் இதே புகார் தமிழகம் முழுவதும் எதிரொலித்துள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் வாக்குப்பதிவுக்கு ஒருநாள் முன்னதாகவே வாக்குச்சாவடிய¤ல் வந்து தங்கியிருக்க வேண்டும். இந்த பணி ஆசிரியர், ஆசிரியைகளுக்கு வழங்கப்பட்டது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக சிமென்ட் ஷீட் பொருத்தப்பட்ட கூரைகள்தான் வாக்குச்சாவடிகளில் உள்ளது. இங்கு மின்விசிறியும் கிடையாது. தேர்தல் நடத்தும் அலுவலர் பணிக்கு ஏராளமான ஆசிரியைகளும் நியமிக¢கப்பட்டிருந்தனர். அவர்கள் குடும்பத்தை
விட்டு ஒருநாள் முன்னதாகவே வாக்குச்சாவடிக்கு வந்து தங்கியிருக்க வேண்டும். இந்நிலையில் வாக்குச்சாவடியில் மின் விசிறி கூட இல்லாமல் கோடை காலத்தில் அவர்கள் கடும் அவதிப்பட்டனர். பல வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை வசதி கூட இல்லாமல் இருந்தது. அதேபோல் குடிநீர் வசதியும் சரிவர செய்யப்படவில்லை. இதனால் தேர்தல் பணிக்கு வந்த ஊழியர்கள், குறிப்பாக பெண் ஊழியர்கள் பெரிதும் அல்லல்பட்டனர்.
வாக்குப்பதிவு நேரம் இந்த முறை மாலை 5 மணிக்கு பதிலாக மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் 6 மணிக்கு தேர்தல் பணி முடிந்ததும் பெண் ஊழ¤யர்கள் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை. காரணம், வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் வரை அவர்கள்
அங்கேயே தங்கியிருக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் வண்டிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு வரவில்லை. பல இடங்களில் இரவு 10 மணிக்கு மேல்தான் இந்த வண்டிகள் வந்திருக்கிறது. இதனால் நள்ளிரவு 12 மணிக்குதான் ஊழியர்கள் வீடு திரும்பியுள்ளனர். இதனால் பெண் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதிலும் பல பெண் ஊழியர்களுக்கு வெளியூர்களில் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களின் நிலை பரிதாபமாக இருந்ததாக தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறினர். இரவு 11 மணிக்கு மேல் அவர்கள் வாக்குச்சாவடியில் இருந்து கிளம்பியுள்ளனர். அதன் பிறகு பஸ்கள் கிடைக்காமல் விடிய விடிய பஸ் நிலையங்களிலேயே அவர்கள் காத்துகிடந்த அவல நிலை ஏற்பட்டது. இதேபோல் ஊழியர்களுக்கு தேர்தல் பணிக்கான சம்பளம் வழங்க, வாக்குப்பதிவு முடிந்த பிறகு அலுவலர் வருவார். அவரும் குறிப்பிட்ட நேரத்துக்கு
வருவதில்லை என்றும் சிலருக¢கு பணிக்கான சம்பளமே அன்றைய தினம் கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ஆசிரியைகள் கூறுகையில், Ôஇரவு முழுவதும் பஸ் நிலையத்தில் பரிதவித்து, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு பஸ்சில் வீடு கிளம்ப¤னோம். இல்லையென்றால் இரவில் லாட்ஜில் அறை எடுத்து தங்க வேண்டும். அது பாதுகாப்பு கிடை யாது. வாக்குச்சாவடியில் பணி ஒதுக்கும் தேர்தல் ஆணையம் அந்த பணி முடிந்ததும் இரவில் ஆசிரியைகள் தங்குவதற்கும் தனியே இடம் ஒதுக்க வேண்டும். இல்லையென்றால் ஆசிரியர்கள் வசிப்பிடத்துக்கு தொலைவில் இல்லாத இடங்களில் பணி வழங்க வேண்டும்Õ என்றனர்.

No comments:

Post a Comment