அன்பு மிக்க ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்!
சுட்டி விகடன் இதழ் வழங்கும் மறக்க முடியாத மாணவர்கள் என்னும் தலைப்பிலான தொலைபேசி வழி பகிர்வில் இன்று (27.04.2014) திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் திருமதி .D.விஜயலட்சுமி அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.
ஆசிரியை திருமதி .D.விஜயலட்சுமி பற்றி...
கண்ணமங்கலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் திருமதி .D.விஜயலட்சுமி தன் ஆசிரியப் பணியை மிகவும் நேசிப்பவர்.
சிறந்த எழுத்தாளர், எப்படியாவது தன் மாணவர்களை சிறப்பாக கொண்டுவர வேண்டும் என்று துடிப்புடன் செயல்படுபவர் .
தன் பதினெட்டு ஆண்டு கால அனுபவத்தில் தான் சந்தித்த மறக்க முடியாத மாணவர்களையும் அவர்களுடனான அனுபவத்தையும் கல்வி விகடன் இணைய இதழில் எழுதி வருகிறார்
மாணவர்களுக்கு புதிது புதிதாய் இவர் அறிமுகப்படுத்தும் வளரறி (FA) செயல்பாடுகள் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து சுட்டி விகடன் இதழை அலங்கரிக்கின்றன .
அதுமட்டுமின்றி பெண்மை ,சமூகம்,காதல் போன்ற தலைப்புகளில் இவர் எழுதிய பல கட்டுரைகள் ithamilhttp://www.ithamil.com/
ஆனந்த விகடனில் ,"குழந்தைகளை பள்ளிக்கு வரவழைப்பது எப்படி?" என்ற தலைப்பில் இவரது கட்டுரை பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை தருவதாக இருந்தது
.தி ஹிந்து ஆங்கில நாளிதழில் தன் கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்து வரும் இவர் தமிழ் தி இந்து இணைய இதழிலும் தனது விழிப்புணர்வு கட்டுரைகளை வழங்கியிருக்கிறார் .
அவள் விகடனில் அனுபவம் பேசுகிறது .குட்டீஸ் குறும்பு ஆகிய பகுதிகளில் இவரது சொல்வன்மை இடம்பிடித்திருக்கிறது .
இவரது படைப்புகள் அனைத்து முன்னணி பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. முக்கியமாக தினமலர், தினத்தந்தி,
கல்கி ,கவி ஓவியா,,பாக்யா , தேவதை ,தங்க மங்கை ,புதிய தலைமுறை ஆகிய இதழ்களில் இவரது கதை ,கட்டுரை ,கவிதைகள் இடம்பிடித்திருக்கின்றன .
மாணவர்களை கவரும் வண்ணம் இவர் எழுதிய தலைவர்கள் மற்றும் ,விழிப்புணர்வு சார்ந்த பாடல்கள் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டம் முழுவதும் வலம் வருகின்றன.
வசந்த் தொலைக்காட்சியில் கவிஞர் வாலியின் பாடல் வரிகளுக்கு புதிய வரிகளை எழுதும் போட்டியில் இவரது பாடலை பாராட்டி கவிஞர்.வாலி சான்றிதழ் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது .
தன் படைப்புகளில் சமூகம் ,மாணவர் ,கல்வி சார்ந்த பார்வையை முன்னிறுத்தும் இவர், தற்போது இந்திராகாந்தி திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆசிரிய பட்டப்படிப்பு M .Ed., படித்து வருகிறார் .எப்போதும் மாணவர்களுக்கு ஒரு நல்ல ஆசிரியராக இருப்பதே தனது விருப்பம் .என்கிறார்
பத்திரிகைகளில் வெளிவந்த இவரது சில படைப்புகள், முகநூலில் இவர் வெளியிட்ட கருத்துகளில் சில
www.vijivellore.blogspot.c
என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவரது முகநூல் முகவரி
https://www.facebook.com/
இவரது மின்னஞ்சல் vijayalakshmiraja1975@gmai
இவரது இணையதளம் www.vijivellore.blogspot.c
இவரின் உரையை கேளுங்கள்! பயன் பெறுங்கள்!!
இவரின் உரையை கேட்க 044-66802905 என்ற எண்ணிற்கு டயல் செய்யுங்கள்.
பத்திரிகைகளில் வெளிவந்த இவரின் சில படைப்புகளை காண
http://kalvi.vikatan.com/
http://kalvi.vikatan.com/
http://kalvi.vikatan.com/
http://kalvi.vikatan.com/
http://kalvi.vikatan.com/
http://kalvi.vikatan.com/
http://kalvi.vikatan.com/
http://kalvi.vikatan.com/
http://tamil.thehindu.com/
http://tamil.thehindu.com/
http://tamil.thehindu.com/
http://tamil.thehindu.com/
No comments:
Post a Comment