Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 25 April 2014

மாற்று பணியாளர்களாக அழைத்து வரப்பட்டஆசிரியர்கள் பரிதவிப்பு பணியும் இல்லை, சாப்பாடும் இல்லை

வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து தேர்தல் பணிக்காக, மாற்று ஊழியர்களாக அழைத்து வரப்பட்ட 250 ஆசிரியர்கள் அடிப்படை வசதி இல்லாத இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும், அவர்களுக்கான தேர்தல் பணியும், பணமும் வழங்கப்படாததால் தவித்தனர். திருவொற்றியூர் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் மாற்று ஊழியர்க ளாக தேர்தல் பணியாற்றுவதற்காக திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை, பள்ளிப்பட்டு, பொன்னேரி, வேலூர் மாவட்டம் சோளிங்கர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 250 ஆசி ரியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வாக்குச்சாவடி அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பணிகளில் மாற்றுப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த பணிக்காக அவர்கள் நேற்று முன்தினம் இரவே திருவொற்றியூர் பெரியார் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு தங்குவதற்கு இடமோ, சாப்பாடு வசதியோ, கழிவறை வசதியோ செய்துதரவில்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண் ஆசிரியர்கள். இது குறித்து சம்மந்தப்பட்ட தேர்தல் பொறுப்பு அதிகாரிகளிடம் பலமுறை ஆசிரியர்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களுக்கு தரவேண்டிய தினப்படியை கேட்டதற்கு நாளை வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்காக வெகுதூரத்திலிருந்து அழைத்து வந்து பணியும் வழங்காமல், சாப்பாடும் தராமல் எங்களை தவிக்க விட்டுவிட்டனர் என்று புலம்பிய ஆசிரியர்கள் அந்த பள்ளிவளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

No comments:

Post a Comment