Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 18 December 2013

"தமிழகத்தில்,3.7 கோடி பேருக்கு ஆதார் அட்டை வினியோகம்": துணை இயக்குனர் தகவல்

"தமிழகத்தில், 3.7 கோடி பேருக்கு, ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளன,'' என, ஆதார் அட்டை வழங்கும் நிறுவனத்தின், துணை இயக்குனர், திருமால் கூறினார்.

மதுரையில் அவர் கூறியதாவது: நாடு முழுவதும், 52 கோடி பேருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தினமும், 10 லட்சம் பேருக்கு, அட்டைகள் தயாராகின்றன. தமிழகத்தில் உள்ள, 7.2 கோடி மக்கள் தொகையில், 5 வயதுக்கு மேலான, 6.75 கோடி பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வரை, 4.5 கோடி பேருக்கு படம் எடுக்கப்பட்டுள்ளது. 3.7 கோடி பேருக்கு, அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன; இது, 51 சதவீதமாகும். மதுரையை பொறுத்தவரை, 30 லட்சம் பேரில், 19.45 லட்சம் பேர், ஆதார் அட்டைகள் பெற்றுள்ளனர். தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆதார் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதில், விடுபட்டவர்கள், அதற்கான மையங்களுக்கு சென்று, படிவம் பூர்த்தி செய்து கொடுத்து, பதிவு செய்யலாம். ஆதார் அட்டை பதிவுக்கு நிரந்தர மையம் ஏற்படுத்த, மாநில அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கார்டுகள் குறித்த நிலை, திருத்தம் உட்பட, அனைத்து விவரங்களையும் பெற, மொபைல் போனில், 51969 என்ற எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி தகவல் பெறலாம். இவ்வாறு, திருமால் கூறினார்.

No comments:

Post a Comment