Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 18 December 2013

பள்ளி செல்வதை நிறுத்திய சிறுவர்களுக்கு தொழிற்பயிற்சி

படிப்பை இடையில் நிறுத்திய சிறுவர்களுக்கு, இலவச தொழிற்பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, அவர்கள் பற்றிய கணக்கெடுப்பு தீவிரமாக நடந்துவருகிறது.




கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்களில் பணியாற்றும், 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை மீட்டு, அவர்களுக்கு, குழந்தை தொழிலாளர் சிறப்பு மையங்களில், சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த மையங்களிலேயே, 3 ம் வகுப்பு முதல், 5 ம் வகுப்பு வரையிலான பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. பின் அவர்கள், முறையாக பள்ளிகளில், 6ம் வகுப்பு சேர்க்கப்படுகின்றனர். அங்கு, பிளஸ் 2 வரை படிக்கலாம். குடும்பச்சூழல், படிக்க விருப்பமின்மை உள்ளிட்ட காரணங்களால், சிலர் பள்ளிக்குச் செல்ல முடிவதில்லை. அவர்களுக்கு, மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம், மூன்று முதல், ஆறு மாதம் இலவச தொழிற்பயிற்சி அளிக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை அடுத்து, தமிழகத்தில், கடந்த, ஐந்து ஆண்டுகளில், பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தே போது, இடையில் நிறுத்திய மாணவ, மாணவியரைக் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்ட தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் நாராயணசாமி கூறுகையில், ""படிப்பை பாதியில் கைவிட்ட மாணவ, மாணவியர் குறித்து, கணக்கெடுத்து வருகிறோம். அவர்களுக்கு, தையல், எம்ப்ராய்டரி, காளான் வளர்த்தல், கம்ப்யூட்டர் அடிப்படை, எலக்ட்ரானிக், மோட்டார் மெக்கானிக், ஏசி மற்றும் பிரிட்ஜ் பழுதுபார்த்தல், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மொபைல் போன்களை பழுது பார்த்தல், டி.டி.எச்., நிறுவுதல் உள்ளிட்டவை தொடர்பாக, 3 முதல், 6 மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் சார்பில், தொழிற்பயிற்சிக்கான, என்.சி.வி.டி., சான்றிதழ் வழங்கப்படும். அது, அவர்களின் எதிர்கால வேலைக்கு உதவும்,''என்றார்.

No comments:

Post a Comment