தமிழக அளவில் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை நியமனம் செய்த, முதல்வர் ஜெ.,க்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு ஸ்ரீரங்கத்தில் நடத்துவதென, பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
சிவகங்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் சங்க, மாநில மாநாடு ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் கோவிந்தராஜூ, துணை தலைவர் இளவரசன் கூறியதாவது: தமிழகத்தில், 2011-12ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கட்டக்கலை, தோட்டக்கலை, கம்ப்யூட்டர் ஆகிய பாடங்களுக்கு,16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்களை நியமனம் செய்து, முதல்வர் ஜெ., உத்தரவிட்டார். இதற்காக, ஸ்ரீரங்கத்தில் அவருக்கு சங்கம் சார்பில் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தப்படும். கடந்த ஆண்டு, விபத்து உள்ளிட்ட வகையில் உயிரிழந்த 7 பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பத்திற்கு, நிதி உதவி அளிக்கவேண்டும். மாணவர்களை நல்வழிப்படுத்தும், சிறப்பாசிரியர்கள் பணியில், பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்து ஈடுபடுத்தவேண்டும். சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்குதல், தேர்வு அறை கண்காணிப்பாளர், தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும், என்றனர்.
No comments:
Post a Comment