Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 18 December 2013

எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் மேல்படிப்பு: கிராமத்தில் பணிபுரிவது கட்டாயமாகிறது



எம்.பி.பி.எஸ்., மாணவர்கள், முதுகலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் போது, ஓராண்டு கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கப்படுகிறது. இது, 201516ம் கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வருகிறது. ராஜ்யசபாவில், நேற்று கேள்வி ஒன்றுக்கு, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். இது தொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது: இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரைப்படி,"முதுகலை மருத்துவ கல்வி விதிமுறை, 2000ல்' திருத்தம் கொண்டு வரப்படுகிறது. நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில், 2,500 டாக்டர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், நாடு முழுவதும் சமூக மருத்துவ மையங்களில், பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 13,500 டாக்டர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment