Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 20 January 2014

பாலியல் வன்கொடுமைகள்: வெளிவராத புகார்கள்; தயங்கும் பெற்றோர் : மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் குழந்தைகள்


பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ள போதிலும், குடும்ப சூழல், சுய மரியாதை உள்ளிட்ட காரணங்களால், பெற்றோர் பதிவு செய்ய முன்வருவதில்லை. இதனால், மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்வி குறியாகும் வாய்ப்புள்ளதாக, குழந்தைகள் பாதுகாப்பு நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமைகள் என, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 2011ம் ஆண்டு நிலவரபடி, இந்தியாவில் 43 ஆயிரத்து 338 குழந்தைகள், பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி இருப்பதாக, மனித உரிமைகள் மையம் தெரிவித்துள்ளது. இது, ஆண்டுதோறும் 36 சதவீதம் அதிகரித்துள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை, சென்னையை அடுத்து, கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களிலே, அதிகளவு பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்படி நடக்கும் வன்கொடுமைகளில், 35 சதவீதம், தெரிந்த நபர்களால் நடக்கிறது என்பது வேதனைக்குரியது. குழந்தைகளின் பாதுகாப்பு குறைந்துள்ளதாலும், பாலியல் தொடர்பான விழிப்புணர்வு இல்லாததாலும், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, இந்தாண்டு நிலவரப்படி, குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில், பதிவு செய்யப்பட்ட புகார் எண்ணிக்கை, பத்தாக உள்ளது. காவல்துறையால் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கும் புகார்கள், 90க்கும் குறைவாக உள்ளன. மொத்தத்தில், பதிவு செய்யப்பட்டவை 100க்கும் குறைவான புகார்களாக இருந்தாலும், பதிவு செய்ய மறுக்கப்படும் புகார்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவையாக இருக்க 
வாய்ப்புள்ளதாக, குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர். கிராமப்புறங்களில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், குடும்ப சூழல், சுயமரியாதை உள்ளிட்ட காரணங்களால், பதிவு செய்யப்படுவதில்லை. பெற்றோர்களின் ஆதரவும், சமூக பாதுகாப்பும் இல்லாததால், பல்வேறு மனரீதியான பிரச்னைகளுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர்.
குழந்தைகள் நல ஆர்வலர் ராதிகா கூறுகையில், ""கோவையில், நகரப்பகுதிகளை விட, கிராமப்புறங்களில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. குடும்பத்தில், பெற்றோர் இருவருமே, வேலைக்கு செல்வதால், குழந்தை மீதான கவனிப்பு குறைத்துள்ளது. தவறான தொடுதலை கூட அறிந்து கொள்ள முடியாத, குழந்தைகள் அதிகளவில் இருப்பதாக, ஆய்வு கூறுகிறது. இதற்கு, பாலியல் தொடர்பான விழிப்புணர்வு, குழந்தைகளிடம் இல்லாமல் இருப்பதே காரணம். கிராமப்புறங்களில், பாலியல் வன்முறை
களுக்கு ஆளான குழந்தைகளுக்கு, உளவியல் ஆலோசனை வழங்காமல், திருமணம் செய்து வைக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதனால், மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்வி குறியாக வாய்ப்புள்ளது,'' என்றார்.

"மனநல ஆலோசனையே மருந்து'
உளவியல் மருத்துவர் ரபீந்திரனிடம் கேட்டபோது, 
""குழந்தைகளுக்கு சிறுவயதில் நடக்கும் சம்பவங்கள் ஆணித்தரமாக பதிந்து விடுகின்றன. குறிப்பிட்ட வயதில், குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடக்கும்போது, திருமண வாழ்க்கையை வெறுக்கும் அளவுக்கு மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான குழந்தைகள், உறவினர்களாலேயே, பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இப்படி பாதிக்கப்படும் குழந்தைக்கு, உளவியல் ஆலோசனையே மருந்தாக இருக்கும். பாலியல் குற்றங்களை புகார் செய்யாமல் இருப்பதால், இன்னும் அதிகளவு பாலியல் வற்புறுத்தலுக்கு, குழந்தைகள் ஆளாக்கப்படுகின்றனர்,'' என்றார்.

No comments:

Post a Comment