"புதிய பென்ஷன் திட்டத்தை ரத்த செய்யக்கோரி, பிப்.,18 ல் சென்னையில், 10 ஆயிரம் பென்ஷனர்கள் பங்கேற்கும் தர்ணா போராட்டம் நடத்தப்படும், என, மத்திய, மாநில அரசு பொதுத்துறை அமைப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர் என்.எல்.சீதரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடவேண்டும். குறைந்த பட்ச பென்ஷனாக ரூ.3,500 வழங்க வேண்டும். குடும்ப பென்ஷன் மற்றும் விலைவாசி உயர்வுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கிராஜூவிட்டியை சட்டப்படி வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு அரசு பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித்தருமாறு, அரசை கேட்டுள்ளோம்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த டிச.,4 ல், சென்னையில், கோரிக்கை மாநாடு நடந்தது. அதில், எடுத்த முடிவுபடி, பிப்.,18 ல், தமிழக அளவில் இருந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பென்ஷனர்களை திரட்டி, சென்னை, சேப்பாக்கத்தில், தர்ணா போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம், என்றார்.
No comments:
Post a Comment