மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது, 90 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. கூடுதல் 10 சதவீத அகவிலைப்படி உயர உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா? ஒவ்வொரு மாதமும், இந்திய அளவில் பரவலாக, பொருட்களின் விலை குறியீட்டுப் புள்ளி சேகரிக்கப்படுகிறது. அதன் சராசரியை கணக்கிட்டுக் கொள்கின்றனர்.
இப்படி கடந்த ஆண்டின் (2013), 12 மாத சராசரியை எடுத்துக் கொள்கின்றனர். அதனுடன், 2005 ம் ஆண்டின் சராசரியை கழித்து, அதை நூறால் பெருக்குவர். பின், அந்த தொகையை மீண்டும், 2005ம் ஆண்டின் சராசரி விலைப்புள்ளி குறியீட்டால் வகுப்பர். இதில் கிடைக்கும் தொகையே, ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய அகவிலைப்படி சதவீதம். இதன்படி கடந்த 12 மாத விலைப்புள்ளி சராசரி 232.17 இதனுடன் 2005ம் ஆண்டின் விலைப்புள்ளி சராசரி 115.76ஐ கழித்து, நூறால் பெருக்கி, மீண்டும் 115.76ஆல் வகுக்க 100.56 சதவீதம் வருகிறது. இது இப்போது வழங்கப்பட வேண்டிய சதவீதம். ஏற்கனவே 90 சதவீத அகவிலைப் படியை பெற்று வருவதால், மீதியுள்ள 10 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்படும்.
No comments:
Post a Comment