Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 19 February 2014

பிளஸ்2 பொதுத்தேர்வுக்கு தட்கலில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்


 நடப்பு கல்வி ஆண்டிற்கான மேல்நிலை பொதுத்தேர்வு எழுத தேர்வுத்துறையால்   அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும்  விதமாக சிறப்பு  அனுமதி திட்டத்தில் ஆன் லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்  ஆகும்.  தேர்வு செய்யப்பட்ட மையங்களில் இதற்காக விண்ணப்பிக்கலாம். தனியார்  பிரவுசிங் சென்டர்கள் மூலம்  விண்ணப்பிக்க இயலாது. சிறப்பு மையங்கள் பற்றிய  விபரத்தை www.tndge.in என்ற  இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். 

செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணத் தொகை பதிவுச் சீ ட்டில் குறிப்பிடப்பட்டிருக் கும்.  சிறப்பு மையத்தில் உரிய கட்டணங்களுடன் தேவையான சான்றிதழ்கள் மற்றும்  பாஸ்போர்ட் அளவு  புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும். உரிய தேர்வு கட்டணத்துடன் ரூ.  ஆயிரம் சிறப்பு கட்டணம் மற்றும்  ஆன்லைன்பதிவு கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.  இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறையினர்  செய்துள்ளனர்.

No comments:

Post a Comment