சமூக அறிவியல் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில்(ICSSR), சமீபத்தில் சர்வே ஒன்றை மேற்கொண்டது. அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தின் 22 மாவட்டங்களைச் சேர்ந்த, 75% பழங்குடியின ஆண் குழந்தைகள் கல்வியில் பின்தங்கியுள்ளனர் என்றும், பெண் குழந்தைகளோ, பள்ளியிலேயே சேரவில்லை என்றும் அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: 4வது மற்றும் 5ம் வகுப்புகளில், 75% பழங்குடியின ஆண் மாணவர்கள் இடைநிற்றலால் பாதிக்கப்படுகிறார்கள். அந்த நிலையிலான மாணவிகளோ, பள்ளியிலேயே சேர்வதில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்வே குழுவில் மொத்தம் 30 பேர் இடம் பெற்றிருந்தனர். கல்வியைப் பற்றி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு இல்லாமை மற்றும் தங்களின் பாரம்பரிய தொழிலில் பிள்ளைகளை கட்டாயமாக ஈடுபடுத்துதல் உள்ளிட்டவை இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
No comments:
Post a Comment