Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 8 February 2014

சம்பளம் தாமதம்: பகுதிநேர ஆசிரியர்கள் திண்டாட்டம்

:ஒவ்வொரு மாதமும் சம்பளம் தாமதமாக வழங்கப்படுவதால், பகுதி நேர ஆசிரியர்கள் அவதியடைந்துள்ளனர்.ராமநாதபுரம், பரமக்குடி கல்வி மாவட்ட பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களில், ரூ.5000 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பகுதி நேர கலை, பட்டதாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் 256 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குரிய சம்பளம் ஒவ்வொரு மாதமும் 5ம் தேதி வழங்க வேண்டும். ஆனால், மூன்றாவது வாரத்தில் தான் வழங்கப்படுகிறது. பகுதி நேர ஆசிரியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜெயகணேஷ்: எங்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. மாதம் 5ம் தேதி வழங்க வேண்டிய சம்பளம், ஒவ்வொரு மாதமும் 20 தேதிக்கு பின்னரே கணக்கில் சேர்க்கப்படுகிறது. 30 கி.மீ., தூரம் சென்று பணியாற்றும் எங்கள் நலன் கருதி, 7ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரி ஒருவர் கூறியதாவது: பகுதி நேர ஆசிரியர்களுக்குரிய சம்பளத்தை, அவர்களது வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் தாமதமின்றி செலுத்துகிறோம். பட்டுவாடா செய்வதில் வங்கிகள் தாமதிக்கின்றன' என்றார்.

No comments:

Post a Comment