Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 8 February 2014

மார்ச், 8ம் தேதி, 'தாவணி தினம்' கொண்டாட, கோ-ஆப்டெக்ஸ் அழைப்பு


உலக மகளிர் தினத்தையொட்டி, 'தாவணி தினம்' கொண்டாடும்படி, கல்லூரி மாணவியருக்கு, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், வேண்டுகோள் விடுத்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி ?ம் தேதியில் இருந்து, 15ம் தேதி வரை, அரசு அலுவலகங்களில், 'வேட்டி தினம்' கொண்டாடப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக, உலக மகளிர் தினமான, மார்ச், 8ம் தேதி, 'தாவணி தினம்' கொண்டாட, கோ-ஆப்டெக்ஸ், முடிவு செய்துள்ளது.

இது குறித்து, சகாயம் கூறியதாவது:வேட்டி தினத்திற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அதைத் தொடர்ந்து, உலக மகளிர் தினம் வரை, ஏதேனும் ஒரு நாளை, தேர்வு செய்து, 'தாவணி தினம்' கொண்டாடும்படி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவியருக்கு, கோரிக்கை விடுத்துள்ளோம்.அன்றைய தினம், தாவணி அணிந்து வரும்படி கேட்டுள்ளோம். கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில், பல வண்ணங்களில், தாவணிகள் விற்பனைக்கு உள்ளன.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment