பன்னாட்டு லயன்ஸ் கிளப் (மாவட்டம் 324 A2) சார்பில் திருச்சி செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழா கொண்டாட்டத்தில் திருச்சி தஞ்சை,.திருவாரூர், கரூர், புதுக்கோட்டை , நாகை, மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள சிறந்த ஆசிரியருக்கான கலவி திலகம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
திருவெறும் பூர் அருகே உள்ள வேங்கூர் செல்லம்மாள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங் கள் மற்றும் சௌடாம்பிகா கல்விக் குழுமம் இணைந்து ஆசிரியர் தினவிழா மற்றும் கல்வி தொண்டாற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி திலகம் விருது வழங்கும் விழா நடந்தது. மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார் தஞ்சை தமிழ் பல்கலை. துணை வேந்தர் திருமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். லயன் சங்கம் சார்பில் தேர்வு செய்யப் பட்ட ஆசிரியர்களுக்கு கல்வி திலகம் விருதை அவர் வழங்கினார். லயன்ஸ் மாவட்ட முதல்நிலை ஆளுநர் வேதநாயகம், 2ம் நிலை ஆளுநர் வெங்கட் ராமன், லயன் இணை ஆசிரியர் நீனிவாசன், லயன் இன்ஸ்டியூட் தலைவர் சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினர். லயன்ஸ் மாவட்ட ஆளுநர் பிரேம் சிறப்புரையாற்றினார். புகழூர் அரிமா சங்க செல்வராஜ் நன்றி கூறினார்
சாரதா நடுநிலை பள்ளியில் நடந்த விழாவில் தலைமையாசிரியர் ஜோதி தலைமை வகித்தார். பள்ளி மாணவ மாணவிகள் ஓரங்க நாடகம், கவிதை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச் சிகளை நடத்தினர்.
No comments:
Post a Comment