Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 29 June 2014

இணையவழி கலந்தாய்வு குறித்து சில ஆலோசனைகள்


1.ஒவ்வொரு மண்டலத்திலும் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் படி அந்த மண்டலத்திற்கு தகுந்தவாறு முன்னுரிமை பட்டியல் தனித்தனியாக தயார் செய்யப்படும்.

2.ஒரு மண்டலத்தை தேர்ந்தெடுத்த பிறகு வேறு ஒரு மண்டலத்தை எக்காரணம் கொண்டும் தேர்வு செய்ய முடியாது.

3.கலந்தாய்வு தங்களது மாவட்டத்தில் எந்த இடத்தில் நடைபெறுகின்றது என அறிந்து ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே செல்ல வேண்டும்.தாமதமாக செல்ல வேண்டாம்.

4.கலந்தாய்வு நடைபெறும் மையத்தில் ஒவ்வொரு மண்டலமாக தனி தனியாக கணினி முன்பு நடைபெறும்,வரிசைப்படி தேர்ந்தெடுக்கலாம்

5.தாங்கள் தேர்வு செய்த மண்டலத்தைப் பற்றி தெளிவான ஆலோசனைகளை கொண்டு முடிவு எடுக்கவும்,ஒரு இடத்தைப் தேர்வு செய்துவிட்டால் மீண்டும் எக்காரணம் கொண்டும் வேறு இடத்தை தேர்வு செய்ய இயலாது.

6.தாங்கள் கலந்தாய்வு மையத்திற்குள் செல்லும் போது கணினி அறைக்குள் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

7.தங்களுக்கு கணினியில் பதிவு செய்த விவரத்தை கொடுத்தால் எடுத்துச் செல்லவும்,அவ்வாறு இல்லாவிடில் கலந்தாய்வு மையத்திற்குள் தேவையான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

8.30.06.2014 அன்று அனைவரும் கலந்தாய்விற்கு செல்ல வேண்டும்,மேற்கொண்டு தொடரும் பட்சத்தில் மறுநாள்(01.07.2014) செல்ல வேண்டும்.

அரசின் கல்வித்துறைவெளியிட்டஜூலை மாத நாட்காட்டி- அனைத்துவகை அரசுபள்ளிகளுக்கும் பொதுவானது

Bharathidasan -M.Ed. ADMISSION NOTIFICATION FOR 2014 – 2015-Distance Education

தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

                                           

மன உளைச்சலுக்கு இலக்காகும் மாணவ, மாணவிகள்


பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் சிறப்பிடம் பெறும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

அதிக மதிப்பெண்கள் பெற வைக்கும் நோக்கில் மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் பள்ளி நிர்வாகங்களின் செயல்பாடுகளை கல்வித் துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலங்களில் அரங்கேறாமல் தடுக்க முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

மாநில அளவில் சிறப்பிடம் பெற வேண்டும் என்பதற்காகவே, பத்தாம் வகுப்பு , பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அதிக அளவிலான கட்டுப்பாடுகளை தனியார் பள்ளிகள் விதிக்கின்றன.

மாநில அளவில் சிறப்பிடம் பெறும் பள்ளிகளில் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் அல்லது முன்னணி பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்ற நோக்கில் தனியார் பள்ளிகள் கொடுக்கும் எல்லாவிதமான நெருக்கடி, மன உளைச்சலைத் தாங்கிக் கொண்டு தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளி விடுதிகளில் பெற்றோர்கள் விட்டுவிடுகின்றனர்.

இதுபோன்ற காரணங்களால், உலக நடப்பை முழுமையாகத் தெரிந்து கொள்ள இயலாத வயதில் உள்ள இந்த மாணவ, மாணவிகளின் பள்ளி நிர்வாகத்தால் தங்களுக்கு ஏற்படும் மன உளைச்சலைக்கூட சக மாணவர்களிடம் சொல்ல முடியாமல் மனதுக்குள் பூட்டி வைக்கின்றனர். இதுபோன்ற மன இறுக்கம் தற்கொலை முடிவுக்கு மாணவர்களை ஆளாக்கி விடுவதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், எப்படியாவது மாநில அளவில் சிறப்பிடம் பெற வேண்டும் என்ற முனைப்பை மட்டும் கையில் எடுக்கும் தனியார் பள்ளிகள், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நெருக்குதலைக் கொடுக்கின்றன. இதன் விளைவால், கடந்தாண்டில் மட்டும் நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஒரு மாணவி , 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்தச் சம்பவங்கள் பெற்றோர்களிடம் அப்போது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனினும், பிள்ளைகளின் எதிர்காலம் கருதி சில நாள்களில் அடங்கிப் போயின.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என அறிவித்த மாவட்ட நிர்வாகமும் , கல்வித் துறையும் அதன்பிறகு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பள்ளி நிர்வாகம் மீது பெரியளவில் நடவடிக்கை பாயாததன் விளைவால், தொடர்ந்து மாணவர்களுக்கு மன உளைச்சல் தரும் நிகழ்வுகள் பல பள்ளிகளில் அரங்கேறியும், வெளிச்சத்துக்கு வராமல் மூடி மறைக்கப்பட்டு விடுவதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், நிகழாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்று மற்ற மாவட்டத்தினரை திரும்பிப் பார்க்கச் செய்த தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டமான தருமபுரியைச் சேர்ந்த தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் அடுத்தடுத்து இரு மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதில், ஒருவர் உயிரிழந்தார்.

பெற்றோர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்தச் சம்பவத்தின் உண்மை நிலையை முழுமையாக அறியும் முயற்சியில் மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறையும் முனைப்புக் காட்டாமல் இதுவரையில் மெளனம் காப்பது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புகின்றன.

எனவே, இந்த விவகாரத்தில் பாரபட்சத்துக்கு இடமளிக்காமல் அதிகாரிகள் நடுநிலையுடன் செயல்பட்டால் மட்டுமே வரும்காலங்களில் இதுபோன்ற மனித உயிரிழப்பைத் தடுக்க முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

மேலும், இன்றைய மாணவ சமுதாயம் மருத்துவம், பொறியியல் தவிர மற்ற எந்தத் துறையை எடுத்துப் படித்தாலும் அதில் ஆர்வமும், அர்ப்பணிப்பு உணர்வும் இருந்தால் இந்த உலகில் வெற்றியாளனாக நிச்சயம் வலம் வரலாம் என்பதை, கல்வித் துறை அதிகாரிகள் பெற்றோருக்கும், மாணவ சமுதாயத்துக்கும் தெளிவுபடுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

கலந்தாய்வு துவங்குவதில் தாமதம்! அரசு பள்ளி ஆசிரியர்கள் பாதிப்பு


கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வு துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்டதால், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், தமிழ் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாறுதல் கலந்தாய்வு ஆன் லைன் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
இதற்காக, மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் உள்ள, அரசு பள்ளிகளில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட வெளி மாவட்ட ஆசிரியர்கள் நேற்று காலை, 9:00 மணிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் குவிந்தனர். வெகு நேரமாகியும் கலந்தாய்வு துவங்காததால் ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், "காலை 9:00 மணிக்கு கலந்தாய்வு துவங்கும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், மாலை 5:00 மணி வரை துவங்காததால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இதனால், ஏமாற்றம் அடைந்துள்ளோம். கலந்தாய்வு முடிந்த பிறகே வீட்டிற்கு செல்வோம்' என்றனர்.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கம்ப்யூட்டரில் "சர்வர்' இணைப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், குறிப்பிட்ட நேரத்திற்கு கலந்தாய்வு துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது."சர்வர்' இணைப்பு கிடைத்ததால் வட்டார வள மைய ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முடிந்து விட்டது. மற்ற ஆசிரியர்களுக்கும் படிப்படியாக இன்றைக்குள் (நேற்று) மாவட்டம் விட்டு மாறுதலுக்கான ஆணை வழங்கப்படும்' என்றனர்.

ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு; 8 மணி நேரம் காத்திருப்பு


சிவகங்கையில், "ஆன்லைனில்' நேற்று மாலை வரை காலியிட விபரங்களை வெளியிடாததால், ஆசிரியர்கள் எட்டு மணி நேரம் வரை, கவுன்சிலிங் மையத்தில் காத்திருந்தனர்.
சிவகங்கை, மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளியில், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நேற்று, பட்டதாரி, சிறப்பு ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான, மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறும் என, அறிவித்தனர். அதன்படி, மாறுதல் கோரி விண்ணப்பித்த, 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வு மையத்திற்கு காலை 9 மணிக்கெல்லாம் வருகை தந்தனர். தொடர்ந்து, மாலை 5 மணி வரை, அடிப்படை வசதிகளே இல்லாத, மையத்தில் எட்டு மணி நேரமாக காத்திருந்தனர். மின்தடை ஏற்பட்டால், ஜெனரேட்டரை பயன்படுத்தி, கலந்தாய்வு நடத்த கல்வித்துறை ஆலோசனை வழங்கியது. ஆனால், சிவகங்கையில், மின்வெட்டு ஏற்பட்டபோதும், ஜெனரேட்டர் வசதி பகல் 12 மணி வரை செய்யப்படவில்லை. இதனால், கலந்தாய்வுக்கு வந்த ஆசிரியர்கள் வகுப்பு அறையில், கோடை வெயில் புழுக்கத்தில் அமர்ந்திருந்தனர். புகார்: நேற்று மாலை 5 மணி வரை, காத்திருந்த ஆசிரியர்கள், அதிருப்தியில், சி.இ.ஓ.,விடம் முறையிட்டனர். அப்போது, "ஆன்லைனில்', காலி இடங்கள் விபரங்கள், இன்னும் வெளியிடப்படவில்லை என, கூறினர். இதனால், நேற்று மாலை வரை காத்திருந்த ஆசிரியர்கள், அதிருப்தியுடன் காணப்பட்டனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,""கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில், இருந்து இன்னும் ஆன்லைனில், காலியிட விபரம் வழங்கவில்லை. தமிழகம் முழுவதும் , இப்பிரச்னை உள்ளது. கலந்தாய்வு நடத்தி, "டிரான்ஸ்பர்' உத்தரவு வழங்க, நாங்கள் தயாராக தான் உள்ளோம்,'' என்றார்.

தினமும் மாலையில் பள்ளியில் சிறப்பு வகுப்புகள்: பள்ளிக் கல்வித்துறை


வேலூர்: அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு மாலை நேரம் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடைபெறும். அதில் முக்கிய பாடங்களை படிக்க மற்றும் எழுத கற்பிக்கப்படும். சிறப்பு தேர்வுகளும் நடத்தப்படும். இந்த சிறப்பு வகுப்புகள் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் தொடங்குகிறது. 

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சுமாராக படிக்கும் மாணவர்கள் மற்றும் கல்வி திறன் குறைவாக இருக்கும் மாணவர்கள் நடத்தும் பாடங்களை கவனிப்பது சிரமம் ஏற்படுகிறது. இதனால் இவர்கள் மீது தனி கவனம் செலுத்துவதற்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. வாரத்தில் 5 நாட்களில் தினமும் 1 பாடம் என பிரித்துக்கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

20 லட்சம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு


லண்டன்,ஜூன் 28-இங்கிலாந்தில் 20 லட்சம் ஆசிரியர்கள் வருகிற ஜூலை 20-ம் தேதி தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரு சதவிகித சம்பள உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் 20 லட்சத்துக்கும் அதிமான ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டு முதல் அரசு ஒரு சதவிகித சம்பள உயர்வு அளித்து வருகிறது. அரசின் இந்த சம்பள உயர்வு ஆசிரியர்களுக்கு கடும் அதிருப்தியை அளித்தது. அவர்கள் பலமுறை கூடுதல் சம்பள உயர்வு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.ஆனால் அரசு இவர்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை.

தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக ஆசிரியர்கள் கருதினார்கள். இதனால் இங்கிலாந்து. வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவற்றில் வேலைபார்க்கும் 20 லட்சம் ஆசிரியர்கள் வருகிற ஜூலை 20-ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர் சங்கமான யுனிசன் அறிவித்து உள்ளது. இங்கிலாந்து ஆசிரியர்களின் இந்த வேலை நிறுத்த அறிவிப்பு இங்கிலாந்து அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராக 530 பேருக்கு பதவி உயர்வு


பள்ளிக்கல்வித்துறையில் நாளை நடைபெறவுள்ள இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வில் மொத்தம் 530 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது; பதவி உயர்வு பெற உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை (பாடவாரியாக) வெளியீடு

இதுகுறித்து பதவிஉயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் சார்பில் அளித்த அறிக்கையில், 2014-15ம் கல்வியாண்டின் பள்ளிக்கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்துபட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை பின்வருமாறு:
தமிழ் : 171
ஆங்கிலம் : 42
கணிதம் : 81
அறிவியல் : 155 (ஆனால் அறிவியல் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் மொத்தம் 42 பேர்கள் உள்ளனர்)
சமூக அறிவியல் : 81
மொத்தம் : 530 இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது என அச்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 30, ஜூலை 1-ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு


சேலம் மாவட்டத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூன் 30, ஜூலை 1-ம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இது குறித்து தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) ப.உஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி அலுவலரின் ஆளுமைக்குள்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2014-ம் ஆண்டுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

ஜூன் 30-ம் தேதியும், ஜூலை 1-ம் தேதியும் சேலம் நான்கு ரோடு, சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் ஆன்லைன் மூலம் இந்த கலந்தாய்வு நடக்க உள்ளது. இதேபோல் பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ளது.

கலந்தாய்வில் பங்கேற்க உள்ள ஆசிரியர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னரே மையத்துக்கு வர வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் தவிர வேறு யாரும் மையத்தில் இருக்கக் கூடாது என்றும் உஷா கேட்டுக் கொண்டுள்ளார்.

Saturday, 28 June 2014

மாறுதல் கலந்தாய்வில் தமிழுக்கு சோதனை: கொதிக்கும் ஆசிரியர்கள்


அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் இரண்டு ஆண்டுகளாக, தமிழாசிரியர் பணியிடங்களை மறைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான உள்மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. 'இதில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், சேலம் உட்பட எட்டு மாவட்டங்களில், பட்டதாரி தமிழாசிரியர்களுக்கான காலியிடங்களை 'ஆன்லைனில்' காண்பிக்கவில்லை' என சர்ச்சை எழுந்தது. தமிழாசிரியர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 'சிவகங்கையில் எட்டு காலியிடங்கள் இருக்கும் நிலையில் ஒரு இடத்தை கூட காண்பிக்கவில்லை' என புகார் தெரிவித்து தமிழாசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழாசிரியர் கழக மாநில துணை தலைவர் இளங்கோ கூறியதாவது: மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, சேலம் மாவட்டங்களில், தமிழாசிரியர் காலியிடங்களை மறைத்துவிட்டனர். இரு ஆண்டுகளாக சிவகங்கையில் பட்டதாரி தமிழாசிரியர் காலியிடங்கள் காட்டப்படவில்லை. சிபாரிசுகளுக்காக சென்னை இயக்குனரகத்திலேயே மறைக்கப்படுகின்றன. எனவே 'ஆன்லைன்' கலந்தாய்வுக்கு தடை விதிக்கவேண்டும். இவ்வாறு கூறினார். அதிகாரிகள் கூறுகையில், 'ஆன் லைன் கலந்தாய்வில் காலியிடங்கள் சென்னையில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. மாவட்ட அதிகாரிகள் பொறுப்பல்ல' என்றனர்.

கடைகளில் விற்பனைக்கு வந்த அரசின் இலவச பாட புத்தகங்கள்: கல்வி அதிகாரிகள் ஆய்வில் பறிமுதல்

குன்னூரில் புத்தக விற்பனை கடைகளில் நடந்த திடீர் சோதனையில், அரசின் விலையில்லா புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள, சில பாட புத்தக கடைகளில், விலையில்லா புத்தகங்கள், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது' என, புகார் வந்தது. நேற்று காலை குன்னூர் ஆர்.டி.ஓ., செல்வராஜ் தலைமையில், தாசில்தார்இன்னாச்சிமுத்து, வருவாய் ஆய்வாளர்கள் கந்தசாமி, கிராம நிர்வாக அலுவலர் மஜீத் மற்றும் போலீசார், குன்னூரில் ஒரு கடையில், திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பிளஸ் 1 வகுப்புக்கான கணிதம், இயற்பியல், வேதியியல் உட்பட 296 புத்தகங்களில், 'அரசால் வழங்கப்படும் விலையில்லா புத்தகம்; விற்பனைக்கு அல்ல' என, எழுதப்பட்டுள்ள முதல் தாள் கிழிக்கப்பட்டு விற்பனை செய்வது தெரிய வந்தது. இதேபோல குன்னூர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடத்திய ஆய்வில், 67 புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. மொத்தம் 363 புத்தகங்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில்,'கோவையில் உள்ள கடைகளில் இருந்து மொத்தமாக, அரசின் விலையில்லா புத்தகங்கள் வாங்கி வரப்பட்டன' என, தெரியவந்தது. குன்னூர் ஆர்.டி.ஓ., செல்வராஜ் கூறுகையில், " ரகசிய தகவலின் பேரில், நடத்திய ஆய்வில், 363 விலையில்லாத புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக, கடைக்காரர் மற்றும் ஸ்டேன்ஸ் பள்ளி முதல்வர் கிளமன்ட் குளோரின் ஆகியோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

பிளஸ் 2 கணித விடைத்தாள் நகல் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்': ஐகோர்ட் உத்தரவு


பிளஸ் 2 கணித பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால், விடைத்தாள் நகல் வழங்கியதில், 4 பக்கங்களை காணவில்லை; மறு மதிப்பீடு செய்ய தாக்கலான வழக்கில், அரசுத் தேர்வுகள் இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பொன்னுச்சாமி தாக்கல் செய்த மனு: எனது மகன் பிரகாஷ், பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1080 மதிப்பெண் பெற்றார். ஆங்கிலம், கணிதம், வேதியியல், கம்ப்யூட்டர் அறிவியல் விடைத்தாள் நகல்கள் கோரி, அரசுத் தேர்வுகள் துறைக்கு விண்ணப்பித்தார். இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ததில், கணிதம் தவிர பிற பாடங்களுக்கு நகல்கள் கிடைத்தன. கணித விடைத்தாள் நகல் கோரி, புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலரிடம் பிரகாஷ் விண்ணப்பித்தார். கணிதத்தில் 44 பக்கங்கள் விடையளித்திருந்தார். ஆனால், கல்வி அலுவலகம் மூலம் வழங்கிய விடைத்தாள் நகலில், பக்கம் 35 முதல் 38 வரை காணவில்லை. மொத்தம் 100 மதிப்பெண்ணிற்குரிய 10 மதிப்பெண் கேள்விகளுக்கு விடையளித்திருந்ததில், 97 மதிப்பெண் வழங்கியுள்ளனர். 6 மதிப்பெண்ணிற்குரிய, 10 கேள்விகளுக்கு 56 மதிப்பெண், மொத்தம் 153 மதிப்பெண் வழங்கியுள்ளனர். கேள்விகளுக்கு விடையளித்ததில் தவறு இருந்தால் பூஜ்ஜியம் (0), விடையளிக்காமல் இருந்தால் வெறும் கோடு ஆகியவற்றை அடையாளமாக, விடைத்தாள் முதல் பக்கத்தில் குறிப்பிடப்படுவர். பிரகாஷ், 40 மதிப்பெண்ணுக்குரிய ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு விடையளித்திருந்தார். ஆனால், விடையளிக்கவில்லை என, பூஜ்ஜியம் இட்டுள்ளனர். இதனால், பிரகாஷிற்கு தகுந்த மதிப்பெண் கிடைக்கவில்லை. இதனால், பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கின்போது, முக்கிய கல்லூரியில் பிரகாஷிற்கு இடம் கிடைக்குமா? என அச்சப்படுகிறேன். 40 வினாக்களுக்கு விடையளித்துள்ளதை மதிப்பீடு செய்து, மதிப்பெண் வழங்கவும், பொறியியல் கவுன்சிலிங் தரவரிசைப் பட்டியலில் எனது மகனின் பெயரை சேர்க்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் கணபதி சுப்பிரமணியன், அரசு வக்கீல் குமார் ஆஜராகினர். நீதிபதி, "அரசுத் தேர்வுகள் இயக்குனர், விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” என்றார்.

பிளஸ் 2 தேர்வு: ஒரு மதிப்பெண்ணிற்கு போராட்டம்: ஐகோர்ட் உத்தரவு


பிளஸ் 2 தேர்வு தாவரவியல் பாடத்தில், ஒரு கேள்விக்கு சரியாக விடையளித்திருந்தும், 3 க்கு 2 மதிப்பெண்ணாக குறைக்கப்பட்டதாக தாக்கலான வழக்கில், தேர்வுத்துறை மறுமதிப்பீடு செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. டி.கல்லுப்பட்டி பாண்டியன் தாக்கல் செய்த மனு: என் மகள் பவித்ரா. பிளஸ் 2 தேர்வு தாவரவியல் பாடத்தில் 15 வது கேள்விக்கு சரியான விடையளித்திருந்தார். இதற்கு முழு மதிப்பெண் 3 க்கு பதில், 2 மதிப்பெண் வழங்கியுள்ளனர். முழு மதிப்பெண் வழங்கி, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், பவித்ராவை அனுமதிக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் வக்கீல் ஆர்.ஆர்.கண்ணன் ஆஜரானார்.
நீதிபதி: விடைத்தாள் மறு மதிப்பீடு, மறு கூட்டல் பிரச்னை இருந்தால், அரசு தேர்வுத்துறைக்குத் தான் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக ஐகோர்ட்டை நாடக்கூடாது. மனுதாரர் மகள், மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்கவில்லை. அவர், தேர்வுத்துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். குறுகிய காலத்தில், மறுமதிப்பீடு செய்ய வேண்டும், என்றார்.