மத்திய அரசுக்கு இணையான ஊதியம், 6வது ஊதியக் குழு முரண்பாடுகளைக் களையக் கோரி பிப்ரவரி 25-ம் தேதி கோரிக்கை அட்டை அணிந்து, உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.
திருச்சியில் அண்மையில் நடைபெற்ற இக்கூட்டணியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீóர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
திருச்சி மாவட்டக் கிளையின் 16 ஒன்றியங்களில் பிப்ரவரி 25-ம் தேதி உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவது, பிப்ரவரி 26-ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ப.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் சே. நீலகண்டன் சிறப்புரையாற்றினார். முன்னாள் மாவட்டச் செயலர் ஜி. முரளி, வட்டாரச் செயலர்கள் ராஜேந்திரன்,சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக மாவட்டச் செயலர் ஜோ. ஆல்பர்ட்தாஸ் வரவேற்றார். பொருலாளர் ச. ஜேசுராஜ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment