பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்வுக்கான கேள்வித்தாளில் இடம் பெற்ற ஒரு கேள்வி தெளிவாக இல்லை என்பதால் மாணவர்கள் பதில் எழுத திணறினர். பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. தமிழ் பாடத்தில் இரண்டு தேர்வுகள் முடிந்த நிலையில் 4 நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்று ஆங்கிலம் முதல்தாள் தேர்வு நடந்தது. இதற்கான கேள்வித்தாள் எளிதாக இருந்தது என்று மாணவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் 53வது கேள்வி மட்டும் பதில் எழுத முடியாத அளவுக்கு இருந்தது.
பொதுவாக 53வது கேள்வியில் ஏதாவது ஒரு படத்தை கொடுத்து அந்த படத்தில் உள்ள பொருட்கள், அல்லது அந்த படத்தில் இருந்து தெரியவரும் விஷயம் ஆகியவற்றை பதிலாக எழுத சொல்வார்கள்.
நேற்றைய தேர்வில் ஒரு பையன் மீன் தொட்டியை பார்ப்பது போல படம் கொடுக்கப்பட்டு, அது தொடர்பாக 5 கேள்விகள் கேட்டிருந்தனர். அதற்கான பதில்கள் ஒன்று அல்லது இரண்டு வரிகளில் எழுத வேண்டும். மொத்தம் 5 மதிப்பெண்கள். ஆனால் நேற்றைய கேள்வித்தாளில் இடம் பெற்ற படம் தெளிவாகவே இல்லை. உற்றுப் பார்த்தாலும் அதில் உள்ள விஷயங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் மாணவர்கள் அதற்கு விடை எழுத முடியாத நிலை ஏற்பட்டது. எனவே அந்த கேள்விக்கான 5 மதிப்பெண்களை அனைவருக்கும் வழங்கும்படி மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment