கும்பகோணத்தில் 2004–ம் ஆண்டு ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியாயின. 18 குழந்தைகள் காயமடைந்தன. இதில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கும், காயமடைந்த குழந்தைகளுக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட இன்பராஜ் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன், இழப்பீடு தொகை நிர்ணயம் செய்ய ஒரு நபர் கமிஷனை அமைத்தார்.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு அப்பீல் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர், ‘‘பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது அரசின் சிவில் உரிமை. இதற்காக ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டதை சட்டவிரோதமாக கருத முடியாது. தமிழக அரசின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்கிறோம். பி.சண்முகம் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்து, 4 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இன்பராஜ் மனு மீதான விசாரணையை செப்டம்பர் 15–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’’ என்றனர்.
No comments:
Post a Comment