Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 4 April 2014

ஆசிரியர்களுக்கு முலாயம் மிரட்டல் / அரசு ஊழியர்களை மிரட்டி ஓட்டு கேட்கும் முலாயம்

உத்தரபிரதேச மாநிலம், பலந்த்சார் என்ற இடத்தில், சமாஜ்வாடி சார்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் பேசினார். அப்போது, 'மாநிலத்தில் உள்ள அனைத்து ஜூனியர் ஆசிரியர்களும் சமாஜ்வாடி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு போட வேண்டும். இல்லையென்றால், அவர்கள் தங்களின் வேலையை இழக்க நேரிடும்' என்றார். DINAMALAR NEWS.


அரசு ஊழியர்களை மிரட்டி ஓட்டு கேட்கும் முலாயம்   

பொதுவாக தேர்தல் சமயங்களில் வேட்பாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் வாக்காளர்களிடம் பவ்யமாகவும், அடக்கமாகவும், மிகவும் கெஞ்சி ஓட்டு கேட்பார்கள்.

ஆனால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், பிரசாரத்துக்கு போகும் இடங்களில் எல்லாம் வாக்காளர்களை ஓட்டுப் போடும்படி மிரட்டி வருகிறார்.

அந்த வகையில் இன்று உத்தரப்பிரதேசத்தில் நடந்த பேரணியில் பேசிய முலாயம், தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வருவோர், சமாஜ்வாதிக்கே வாக்களிக்க வேண்டும். இல்லையேல், தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர அரசு ஊழியர்களாக மாற்றும் திட்டத்தை மாநில அரசு கைவிட்டுவிடும். நீங்கள் மட்டும் அல்ல, உங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் சமாஜ்வாதிகே வாக்களிக்க வேண்டும். இங்கு எதுவும் இலவசமாகக் கிடைத்துவிடாது. உங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்க வேண்டும் என்றால், எங்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே வாக்காளர்களை மிரட்டியுள்ளார். DINAMANI NEWS.

No comments:

Post a Comment