Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 10 April 2014

தேர்தல் பணி மாணவர்களுக்கு ரூ.900 சம்பளம்

லோக்சபா தேர்தல் நாளில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், 'லேப்--டாப்' கையாளும் பணியில், அரசு கல்லூரி மாணவர்கள் ஈடுபடுகின்றனர். இந்த பணிக்காக மாணவர்களுக்கு, 900 ரூபாய் ஊதியம் வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

'வெப் -- கேமரா':




தமிழகத்தில், வரும், 24ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும், பதற்றமான ஓட்டுச் சாவடிகளை தேர்தல் கமிஷன் கணக்கெடுத்துள்ளது. அங்கு, 'வெப் - -கேமரா' பொருத்தி, ஓட்டுச்சாவடியில் வைக்கப்படும் லேப்--டாப் கம்யூட்டரில் இணைக்கப்பட உள்ளது. இவை அனைத்தும், இணையம் வழியாக, சென்னை தேர்தல் கமிஷன் அலுவலக பிரதான சர்வருடன் இணைக்கப்படுகின்றன. இதனால், தேர்தல் நாளில், பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் நடக்கும் சம்பவங்களை, சென்னையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், தேர்தல் அலுவலர்கள் நேரடியாக கண்காணிக்க முடியும். ஆனால், மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட ஓட்டுச்சாவடிகளில் பி.எஸ்.என்.எல்., இன்டர்நெட் சேவை கிடைக்கவில்லை.

'மைக்ரோ அப்சர்வர்':




பி.எஸ்.என்.எல்., இன்டர்நெட் சேவை கிடைக்கும் ஓட்டுச்சாவடிகளில் வெப்--கேமரா பொருத்தவும், மற்ற இடங்களில், 'மைக்ரோ அப்சர்வர்' நியமிக்கவும் தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. வெப்--கேமரா பொருத்தப்படும் இடங்களில் நடக்கும் சம்பவங்களை, லேப்--டாப்பில் பதிவு செய்யவும், இன்டர்நெட் இணைப்பு மூலம் தேர்தல் கமிஷன் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பும் பணிக்காக, அந்தந்த பகுதி அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை, தேர்தல் கமிஷன் நியமனம் செய்துள்ளது. தேர்தெடுத்த மாணவர்களுக்கு, ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்தவர்கள், தேர்தல் நாளில், பதற்றமான ஓட்டுச்சாவடி கம்யூட்டரில் பணி செய்வர். இந்த பணிக்காக, 900 ரூபாய் ஊதியம் வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment